பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரொம்ப பெரிசா இருக்கே... டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்சில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் ஒன்றின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டைனோசர் காலத்தில் பிரமாண்ட மிருகங்கள், ஊர்வனங்கள் வாழ்ந்துள்ளன என கூறப்படுகிறது. காலப் போக்கில் இவை எல்லாம் அழிந்து விட்டன. இப்படிப்பட்ட பிரமாண்ட மிருகங்கள் பூமியில் வாழ்ந்தன என்பதை நிரூபிப்பதற்கான ஒரே ஆதாரமாக இப்போது இருப்பவை, அதன் படிமங்கள்தான். பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Dinosaur Bone have been found in France

இந்தநிலையில், பிரான்சின், தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக்- சரன்டீ (Angeac-Charente) பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த 40க்கு மேற்பட்ட உயினங்களின் படிமங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அண்மையில் அங்கு ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டபோது, மண்ணுக்குள் புதைந்து கிடந்த 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவர உண்ணும் வகை டைனோசர்களின் எலும்பு என கூறும் ஆராய்ச்சியாளர்கள், இந்த டைனோசருக்கு நீண்ட கழுத்து மற்றும் வால் இருந்திருக்க கூடும் என தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், இந்த பகுதியிலிருந்து இதுவரை சுமார் 45 வகை இன விலங்குகளின் 7,500 எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Dinosaur that lived 140 million years ago, Bone have been found in France.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X