பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரான்சிலிருந்து இந்தியா கிளம்பியாச்சு 5 ரஃபேல் போர் விமானங்கள்.. அமீரகத்தில் மட்டும் ஒரு ஸ்டாப்

Google Oneindia Tamil News

பாரீஸ்: இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 5 ரஃபேல் ஜெட் போர் விமானங்கள், இன்று பிரான்சிலிருந்து கிளம்புகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் மட்டும் அது நின்று பிறகு இந்தியாவிற்கு வரும் 29ம் தேதி வந்து சேரும்.

Recommended Video

    Rafale Fighter Jet | France To India Travel | Oneindia Tamil

    2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ. 59,000 கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் 12 விமானங்கள் என்ற வீதம் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம்.

    கருப்பர் கூட்டம் சுரேந்திரன், நபிகள் நாயகத்தை அவமரியாதை செய்த கோபல் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததுகருப்பர் கூட்டம் சுரேந்திரன், நபிகள் நாயகத்தை அவமரியாதை செய்த கோபல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    தீவிர பயிற்சி

    தீவிர பயிற்சி

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை 9 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படையிடம் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. ஆனால் இதுவரை அவை இந்தியா வரவில்லை. இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பிரான்ஸ் சென்று அங்கிருந்து, பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆயுத பூஜை

    ஆயுத பூஜை

    இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களை பெற்றுக் கொண்டு, அவற்றுக்கு ஆயுத பூஜை செய்துவிட்டு வந்தார். நான்கு விமானங்கள் மே மாதம் இந்தியா வந்திருக்கவேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அது வரவில்லை. ரஃபேல் போர் விமானம், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டால், இந்த பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத, அதிநவீன விமானமாக, அது விளங்கும்.

    எரிபொருள்

    எரிபொருள்

    ரஃபேல் விமானம் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு ஏறக்குறைய 7,000 கி.மீ தூரத்தை கடந்து வர வேண்டும். எனவே, வழியில், எரிபொருள் நிரப்ப வேறு நாடுகளில் தரையிறங்க தேவையிருந்தது. ஆனால் விமானிகளை தனிமைப்படுத்தும் விதிமுறை அந்த நாடுகளில் இருப்பதால், எரிபொருளை வானிலேயே நிரப்பும் ஏற்பாடுகளுடன், இந்த விமானங்கள் கிளம்புகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும், ரபேல் நின்று பிறகு இந்தியா வரும்.

    அதி நவீன வசதிகள்

    அதி நவீன வசதிகள்

    ரபேல் போர் விமானங்கள் அதிநவீன வசதி கொண்டவை. இஸ்ரேலிய தயாரிப்பு அம்சமான, ஹெல்மெட் மீது டிஸ்ப்ளே, ரேடார் எச்சரிக்கை ரிசிவர்கள், லோ பேண்ட் ஜாமர்கள், 10 மணி நேர டேட்டா ரெக்கார்டிங், இன்ப்ரா ரெட் சர்ச்சிங், டிராக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.

    பலம்

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாதம், பிரெஞ்சு நாட்டு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரபேல் விமானங்களை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்தியா வரும் ரபேல் விமானங்கள், ஹரியானாவிலுள்ள அம்பாலா விமானப் படை தளத்தில் சேர்க்கப்படும். ஒரு பக்கம் சீனா எல்லையில் தொல்லை கொடுக்கும் நிலையில், ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    English summary
    The first batch of five Rafale jets flew out of France today and will arrive in India on Wednesday, July 29.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X