பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா 2-வது அலை- பிரான்சில் மீண்டும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்!

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்சில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் மருத்துவ - பொதுசுகாதார அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் நீடிக்கிறது 5,000க்கு கீழே கொரோனா பாதிப்பு- இன்று 4,462 பேருக்கு தொற்று உறுதிதமிழகத்தில் நீடிக்கிறது 5,000க்கு கீழே கொரோனா பாதிப்பு- இன்று 4,462 பேருக்கு தொற்று உறுதி

மார்ச்சில் அவசர நிலை

மார்ச்சில் அவசர நிலை

பிரான்சில் கடந்த மார்ச் மாதம் இந்த மருத்துவ அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த அவசரநிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா பாதிப்பு

இந்த நிலையில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3,86,35,123 ஆக உயர்ந்துள்ளது. உலகில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,94,311 ஆகவும் அதிகரித்திருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,90,12,215 ஆக உள்ளது.

2-வது கொரோனா அலை

2-வது கொரோனா அலை

இதனிடையே ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. பிரான்ஸில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 22,591, ஸ்பெயினில் 11,970, இங்கிலாந்தில் 19,724 ஆக உள்ளது. இது கொரோனா 2-வது அலை என அழைக்கப்படுகிறது.

பிரான்ஸில் மீண்டும் அவசரநிலை

பிரான்ஸில் மீண்டும் அவசரநிலை

இதையடுத்து பிரான்ஸ் அரசு மீண்டும் மருத்துவ அவசரநிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சனிக்கிழமை முதல் அடுத்து வரும் 4 வாரங்களுக்கு அமலில் இருக்கும் எனவும் அந்த நாட்டு அதிபர் மெக்ரோன் அறிவித்துள்ளார்.

English summary
French government declared a public health state of emergency to contain the spread of Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X