பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக சிவில் வார்.. 3,00,000 பேர் போராட்டம்.. பிரான்சில் மஞ்சள் புரட்சி!

பிரான்சில் நடக்கும் மக்கள் புரட்சி அந்த நாட்டிற்குள் உள்நாட்டு போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

பிரான்ஸ்: பிரான்சில் நடக்கும் மக்கள் புரட்சி அந்த நாட்டிற்குள் உள்நாட்டு போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரான்சில் மக்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களும், சமூக செயற்பாட்டளர்களும் சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் தலைமையிலான அரசு உடனே கவிழ வேண்டும், மேக்ரூனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

ஒரே காரணம்

ஒரே காரணம்

இந்த போராட்டத்திற்கு ஒரே காரணம்தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டும்தான். அங்கு இந்திய ரூபாய் மதிப்பில் பிரான்சில் பெட்ரோல் விலை 140 ரூபாய் வரை விற்கிறது. டீசல் 120 ரூபாய் வரை விற்கிறது. இதில் போன வாரம் தான் 20 சதவிகிதம் விலை ஏற்றப்பட்டது. இதன் காரணமாகத்தான் மக்கள் இந்த போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

எப்போது தொடங்கியது

எப்போது தொடங்கியது

கடந்த நவம்பர் 14ம் தேதி இந்த போராட்டம் சிறிய பேரணியாக தொடங்கியது. ஆனால் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றதும் பெரிதானது. தற்போது பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் பெரிய போராட்டமாக மாறியுள்ளது. தினமும் போராட்டம் நடக்கும் பாரிஸின் ஆர் டி டிரோம்ப் அருகே இருக்கும் கட்டிடம் நோக்கி மக்கள் குவிந்து வருகிறார்கள்.

உக்கிரம் அடைந்துள்ளது

உக்கிரம் அடைந்துள்ளது

கடந்த சனிக்கிழமை இந்த போராட்டம் உக்கிரம் அடைந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதால் பெரிய கலவரம் உருவானது. சனிக்கிழமை தொடங்கிய கலவரம் இப்போது வரை நடந்து வருகிறது. இதுவரை 247 கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டு இருக்கிறது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

இந்த போராட்டத்தில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். 600 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீஸ் பயன்படுத்தும் 13 துப்பாக்கிகள் காணாமல் போய் இருக்கிறது. 3 பேர் பலியாகி உள்ளனர். 250 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 456 கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைக்கப்பட்டு இருக்கிறது.

மஞ்சள் புரட்சி

மஞ்சள் புரட்சி

இதை அந்நாட்டு மக்கள் மஞ்சள் ஆடை புரட்சி என்கிறார்கள். அதாவது நெடுஞ்சாலையில் மஞ்சள் ஆடை அணிந்து செல்லும்படி ஒரு காலத்தில் அந்நாட்டு அரசு ஆணையிட்டு இருந்தது. அதையும் எதிர்க்கும் வகையில் இந்த சட்டை அணிந்து போராடுவதாக கூறுகிறார்கள்.

சிவில் வார் நடக்கிறது

சிவில் வார் நடக்கிறது

இதை அம்மக்கள் அமைதி போராட்டம் என்றாலும் பெரிய போருக்கான ஒத்திகை போலத்தான் நடந்து வருகிறது. இது உள்நாட்டு போரை கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஏற்கனவே கிளர்ச்சி படைகள் அங்கே பெரிய பலம் பெற்று போராட்டம் செய்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

English summary
France fuel protests: People made a civil war against Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X