பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உலக நாடுகளிலேயே பிரான்ஸில்தான் ஒருநாள் கொரோனா தொற்று அதிகம்.

கொரோனா பாதிப்பானது அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை கடுமையாக உலுக்கியது. இதனால் இந்த நாடுகள் கொரோனா பாதிப்பு பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்தன.

France Reports 52,010 New Coronavirus In 24 Hours

பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டது. இப்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைகிறது- இன்று 2,869 பேருக்கு கொரோனா!தமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைகிறது- இன்று 2,869 பேருக்கு கொரோனா!

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. பிரான்ஸில் ஒருநாளில் 52,010 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இத்தாலியில் 21,273 பேருக்கும் இங்கிலாந்தில் 19,790 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 45,157 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அமெரிக்காவில் 34,932 பேருக்கும் ரஷ்யாவில் 16,710 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

English summary
France has Reported 52,010 New Coronavirus In 24 Hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X