பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வேகம் குறைகிறது.. பிரான்சில் பலி எண்ணிக்கை சரிவு.. இன்று 516 பேர் மரணம்

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நான்கு நாட்களில்முதல் முறையாக குறைந்த அளவிலான உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இன்று அங்கு 516 பேர் கொரோனாவைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக பலி எண்ணிக்கையில் சரிவு காணப்பட்டது. இன்றைய 516 பேரையும் சேர்த்து அந்த நாட்டில் இதுவரை 21,856 பேர் கொரோனாவைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.

France reports lowest death toll in four days

அதை விட முக்கியமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டருடன் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 150 பேர் குறைந்து தற்போது 5053 பேராக உள்ளது. இது கடந்த மார்ச் 29ம் தேதியிலிருந்து இன்றுதான் முதல் முறையாக குறைந்துள்ளது.

கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் கடந்த 9 நாட்களாக குறைந்து வந்து இன்று 29,219 ஆக இருந்தது. இது கடந்த 2 வாரங்களில் முதல் முறையாக குறைவு ஆகும்.

France reports lowest death toll in four days

இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத்துறை கூறுகையில் எங்களது தீவிரப் போராட்டத்திற்கு தற்போது மெதுவாக பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை எங்களது கட்டுப்பாட்டை மீறித்தான் எல்லாம் போய்க் கொண்டிருந்தது. தற்போது நிலை கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 பேருக்கு டெஸ்ட்.. கொரோனாவைரஸ் தடுப்பூசி.. சோதனையைத் தொடங்கியது ஆக்ஸ்போர்ட்2 பேருக்கு டெஸ்ட்.. கொரோனாவைரஸ் தடுப்பூசி.. சோதனையைத் தொடங்கியது ஆக்ஸ்போர்ட்

ஐரோப்பி நாடுகளிலேயே இத்தாலி, ஸ்பெயினுக்குப் பிறகு கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு பிரான்ஸ்தான். கொரோனாவின் வெறியாட்டம் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து அந்த நாடு மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது. மருத்துவமனைகளில் அதி வேகமாக வசதிகள் அதிகரிக்கப்பட்டன. படுக்கை வசதிகள் இரட்டிப்பாக்கப்பட்டன. தற்போது நிலைமையில் லேசான முன்னேற்றம் தெரியத் தொடங்கியுள்ளது.

English summary
France has reported 516 new Coronavirus Deaths and this is the lowest toll in last four days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X