பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரான்சில் அடுத்த 2 மாதங்களுக்கு மருத்துவ அவசர நிலை நீட்டிப்பு.. பல நாடுகள் பின்பற்ற வாய்ப்பு

Google Oneindia Tamil News

பாரிஸ் : பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஜுலை 24ம் தேதி வரை மருத்துவ அவசர நிலை ( ஊரடங்கு) நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார துறை ஒலிவியர் வேரான் தெரிவித்தார்.

Recommended Video

    தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் என்ன.. தமிழக அரசு அரசாணை வெளியீடு

    பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் மருத்துவ அவசர நிலை (ஊரடங்கு) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது ஜுலை 24ம் தேதி அதாவது மேலும் இரண்ட மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

    France to extend health emergency another two months until July 24

    இந்த புதிய மசோதா விதிகளின் படி பிரான்ஸ்க்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் (குவாரண்டைனில்) இருக்க வேண்டும்.

    ஐரோப்பாவின் திறந்த-எல்லையான ஷெங்கன் பகுதிக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே இந்த தனிமைப்படுத்தல் பொருந்துமா, அவர்கள் வீட்டிலோ அல்லது ஹோட்டல்களிலோ சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டுமா, எவ்வளவு காலம் நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

    கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் ஒன்றாகும், மேலும் 167,346 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் 24,594 பேர் இறந்துள்ளனர் .
    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தாலும் ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது உட்பட மே 11 முதல் சில ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே கடைகளை மந்தநிலைக்குத் தள்ளிய கொரோனா வைரஸால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து போராடும் விதமாக பிரான்ஸ் பல கடைகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. தொலைதூர அலுவலக ஊழியர்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப பணிக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    France to extend a health emergency imposed to fight the new coronavirus pandemic for another two months until July 24
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X