பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் ஒரு பிரெஞ்ச்... பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பிரிட்டன் பிரதமரின் தந்தை

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரி்ட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் தான் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறி பிரஞ்சு குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ளார்,

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் இந்த முடிவை முன்னெடுத்து, நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த முக்கிய தலைவர்களில் ஒருவர், இப்போது அந்நாட்டின் பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன்.

ஸ்டான்லி ஜான்சன்

ஸ்டான்லி ஜான்சன்

இருப்பினும், அவரது தந்தையும் முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டான்லி ஜான்சன் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்பாக நடைபெற்ற தேர்தலிலும்கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர வேண்டும் என்றே ஸ்டான்லி வாக்களித்திருந்தார்.

தெளிவாகப் புரிந்துகொண்டேன்

தெளிவாகப் புரிந்துகொண்டேன்

இந்நிலையில், தான் பிரான்ஸ் குடிமகன் என்றும் பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளது குறித்து ஸ்டான்லி கூறுகையில், "நான் இப்போது ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

உரிமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே

உரிமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே

நான் ஒரு பிரெஞ்சு. என் அம்மா பிரான்சில் பிறந்தவர். அவரது தாயும் பாட்டியும் முற்றிலும் பிரெஞ்சுக்காரர்கள். எனவே, என்னைப் பொறுத்தவரை இது எனது உரிமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

யாராலும் சொல்ல முடியாது

யாராலும் சொல்ல முடியாது

நான் எப்போதும் ஒரு ஐரோப்பியனாகவே இருப்பேன், அது நிச்சயம். பிரிட்டிஷ் மக்களிடம் நீங்கள் ஐரோப்பியர் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உறவு வைத்திருப்பதும் முக்கியமானது" என்றார்.

நாங்களே ஐரோப்பிய நாகரிகம்

நாங்களே ஐரோப்பிய நாகரிகம்

இருப்பினும், இவரது மகன் போரிஸ் ஜான்சனே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முக்கிய காரணமாக இருந்தவர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு பேசிய போரிஸ் ஜான்சன், "எங்களின் இந்த முடிவை ஐரோப்பிய நாடாகப் பிரிட்டன் இனி இருக்காது என்று கருதத் தேவையில்லை. பல வழிகளிலும் நாங்கள் மிகச் சிறந்த ஒரு ஐரோப்பிய நாகரிகம், இனியும் அவ்வாறே இருப்போம்" என்றார்.

English summary
The father of British Prime Minister Boris Johnson said on Thursday he was in the process of applying for a French passport to maintain his ties with the European Union after Brexit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X