பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா!

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை பெற்றது இந்தியா!

    பாரீஸ்: பிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை இந்தியா முறைப்படி பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ரபேல் போர் விமான கொள்முதல் என்பது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய விவகாரம். 2012-ல் காங்கிரஸ் ஆட்சியில் பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.

    IAF received first ‘acceptance’ Rafale combat aircraft in France

    இதில் பறக்க தயார் நிலையில் இருக்கும் 18 போர் விமானங்களை பிரான்ஸ் கொடுக்கும்; எஞ்சிய 108 விமானங்கள் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படும் என்பது ஒப்பந்தம். 2014 தேர்தலில் காங்கிரஸ் தோற்ற நிலையில் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 2015-ல் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி பிரான்சிடம் இருந்து பறக்க தயாராக இருக்கும் 36 ரபேல் விமானங்களை உடனடியாக வாங்குவோம் என்று அறிவித்தார். இந்த விவகாரம் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ரபேல் விமானங்கள் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் நாடாளுமன்றம் முடங்கியது.

    46 நாட்களுக்கு பின் உயிர்பெற்ற மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட்46 நாட்களுக்கு பின் உயிர்பெற்ற மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட்

    இந்தியாவில் அனில் அம்பானியின் நிறுவனத்தை மட்டுமே விமான பாகங்கள் தயாரிப்புக்கான நிறுவனமான பிரான்சின் டசாட்ஸ் தேர்வு செய்ய வேண்டும் என அழுத்தம் தரப்பட்டதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே ஒரு பேட்டி அளித்தார். அது இந்த பிரச்சனையை மேலும் விஸ்வரூபமாக்கியது. இது நீதிமன்றத்து படிகளும் ஏறியது.

    இந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விமானப் படை துணை தளபதி வி.ஆர். சவுத்ரியிடம் முதலாவது ரபேல் விமானம் ஒப்படைக்கப்பட்டது.

    டசாட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட முதலாவது ரபேல் விமானத்தில் துணை தளபதி சவுத்ரி ஒரு மணிநேரம் பறந்து ஆய்வு செய்தார்.

    English summary
    IAF received its first ‘acceptance’ Rafale combat aircraft from Dassault Aviation in France, yesterday. Deputy Air Force Chief Air Marshal VR Chaudhary also flew in the aircraft for around one hour
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X