பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரீஸ் ஒப்பந்தத்தை சரியாக பின் பற்றும் இந்தியா.. சுற்றுச்சூழலை அதிகம் பாதுகாத்துள்ளோம்- மோடி பேச்சு

Google Oneindia Tamil News

பாரீஸ்: இந்தியா தனது பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பாதையில் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி, டிசம்பர் 12ம் தேதி நடைபெற்ற 2020 ஆம் ஆண்டு காலநிலை லட்சிய உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த உச்சிமாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை, பிரிட்டன், பிரான்ஸ், சிலி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தியது. உலகளாவிய காலநிலை மாற்றத்தை சமாளிக்க தலைவர்களை, அரசுகளை, வணிக மற்றும் சிவில் சமூகம் முழுவதையும் இணைத்து செயல்படுத்துவது இதன் நோக்கமாகும்.

India not only on track to achieve Paris Agreement targets but to exceed them: PM Modi

இதில் பேசிய மோடி, 2005 ஆம் ஆண்டை விட இந்தியா, தனது மாசுவை 21 சதவீதம் குறைத்துள்ளது. இந்தியாவின் சூரிய மின்சக்தி திறன் திறன் 2014ல் 2.63 ஜிகாவாட்டாக இருந்தது. 2020ல் 36 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது என்றார்.

இந்த உச்சிமாநாடு பாரிஸ் ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தின் பெரிய ஒரு முயற்சிதான் இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் இணைந்ததாகும்.

வாழ்த்திய மோடிக்கு ரஜினிகாந்த் ஸ்பெஷல் நன்றி! எடப்பாடி முதல் ஸ்டாலின் வரை மற்ற தலைவர்களுக்கும் நன்றிவாழ்த்திய மோடிக்கு ரஜினிகாந்த் ஸ்பெஷல் நன்றி! எடப்பாடி முதல் ஸ்டாலின் வரை மற்ற தலைவர்களுக்கும் நன்றி

இன்று, நாங்கள் எங்கள் குறிக்கோளை இன்னும் உயர்த்த முயற்சித்துக்கொண்டு இருக்கிறோம். இந்தியா தனது பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பாதையில் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளுக்கு மேலாக சாதித்துள்ளது என்றும் மோடி கூறினார்.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா 2015ம் ஆண்டு கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

"எங்கள் வனப்பகுதியை விரிவுபடுத்துவதிலும், பல்லுயிரியலைப் பாதுகாப்பதிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், உலக அரங்கில், இந்தியா இரண்டு முக்கிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. சர்வதேச சோலார் சக்தி கூட்டணி மற்றும் பேரழிவு தடுக்கும் உள்கட்டமைப்பிற்கான கூட்டணி" என்று மோடி மேலும் தெரிவித்தார்.

English summary
India is not only on track to achieve its Paris Agreement targets but to exceed them beyond expectations: PM Narendra Modi at the Climate Ambition Summit 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X