பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மோடி ஃபீல் பண்ணுகிறார்.. ட்ரம்ப் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் கட்டுக்குள் உள்ளதாக மோடி எண்ணுகிறார்: ட்ரம்ப் அதிரடி

    பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் இந்த முறை ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று நிகழ்ந்தது.

    Kashmir is under control, feels Modi, says Donald Trump

    இதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, நிருபர்களின் ஆங்கில கேள்விகளுக்கும், பிரதமர் மோடி, ஹிந்தியில் பதில் அளித்தார் மோடி. ட்ரம்ப் வழக்கம்போல ஆங்கிலத்தில் பதிலளித்தார். மோயின் ஹிந்தி பதிலை, ட்ரம்ப் மற்றும் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வசதியாக, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

    இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ட்ரம்ப் கூறியதாவது: நாங்கள் நேற்று இரவு காஷ்மீர் பற்றி பேசினோம், பிரதமர் மோடி, காஷ்மீர் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறார் (Prime Minister really feels that he has the situation under control). இந்தியா பாகிஸ்தானுடன் பேசி வருகிறார்கள். இந்தியாவால் ஏதாவது நல்லது செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

    காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பாத்துகறோம்.. யாரும் தலையிட வேண்டாம்.. டிரம்ப் முகத்தில் ஈயாட வைத்த மோடிகாஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பாத்துகறோம்.. யாரும் தலையிட வேண்டாம்.. டிரம்ப் முகத்தில் ஈயாட வைத்த மோடி

    இதனிடையே, நிருபர்களிடம் பேசிய மோடி, காஷ்மீர் விவகாரம், இருதரப்பு பிரச்சினை என்பதால் எந்த நாட்டையும் தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

    இதன் மூலம், மீண்டும் ஒருமுறை, இந்த விவகாரத்தில் வேறு நாடு மத்தியஸ்தம் வேண்டாம் என மோடி உறுதியாக தெரிவித்துவிட்டார்.

    English summary
    US President Donald Trump, who had twice offered to mediate in the issue. "We spoke last night about Kashmir... and the Prime Minister really feels that he has the situation under control," added President Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X