பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பாத்துகறோம்.. யாரும் தலையிட வேண்டாம்.. டிரம்ப் முகத்தில் ஈயாட வைத்த மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் ஆங்கிலம்.. ட்ரம்ப் மீது செல்லத்தட்டு வைரலாகும் வீடியோ

    பாரிஸ்: காஷ்மீர் விவகாரத்தில் எங்கள் பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்து கொள்வோம். இதில் 3-ஆவது நாடு தலையிட தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முகத்தில் அடித்தாற் போல பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா 370 சட்டப்பிரிவை நீக்கியது. இதனால் சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது இந்திய அரசு. இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    காஷ்மீரில் இந்த இரு நாடுகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இவை இந்தியாவின் நடவடிக்கையை கண்டிக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என இரு நாடுகளும் விரும்பின.

    மோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி 'பளார்'.. வைரல் வீடியோமோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி 'பளார்'.. வைரல் வீடியோ

    பிரதமர் நரேந்திர மோடி

    பிரதமர் நரேந்திர மோடி

    இந்த நிலையில் ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    அப்போது நிச்சயம் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஜி7 மாநாட்டில் பேசிய நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரம் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இருதரப்பு விவகாரம்.

    வறுமை

    வறுமை

    இதில் 3-ஆவது நாடு தலையிட முடியாது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானவுடன் நாம் இருவரும் இணைந்து வறுமை, கல்வியின்மை, நோய் பாதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராடுவோம்.

    டிரம்ப்

    டிரம்ப்

    நம் நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம் என நான் அவரிடம் கூறியிருந்தேன் என டிரம்ப் முன்பு மோடி பேசினார். இதை கேட்ட மற்ற நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தன.

    English summary
    PM Narendra Modi says in G& summit that All issues between India and Pakistan are bilateral. No third country has a role.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X