பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரீஸ் நகரின் மையப்பகுதியில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம்

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில், காஸ் கசிவால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். வெடிகுண்டு வெடித்ததாக முதலில் தகவல் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாரீஸ் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள, பேக்கரி ஒன்றில், இன்று காலை பெரும், சத்தத்தோடு ஏதோ ஒரு பொருள் வெடித்தது. இதனால் அந்த பகுதியில் தீ பிடித்தது.

Several injured as massive explosion rips through Paris bakery

தகவல் அறிந்ததும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காவல்துறையினரும் சென்றனர். இந்த சம்பவம் காஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வெடி சத்தம் கேட்டபோது, பெரிய தீ கொழுந்துவிட்டதாக, கண்ணால் கண்ட சிலர் தெரிவித்தனர். முதலில் இது தீவிரவாத தாக்குதல் என தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
A massive explosion probably caused by a gas leak gutted the ground floor of a building in central Paris's shopping district on Saturday (Jan 12), seriously injuring at least 12 people, French police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X