பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்பு.. பிரான்சின் ஈபிள் டவரில் இன்று நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    பாரிஸ்: இலங்கையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஈபிள் டவரில் விளக்குகள் அணைக்கப்பட உள்ளது.

    கொழும்பு நகரில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள், மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் உள்பட இலங்கையில் 8 இடங்களில் நேற்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஈஸ்டர் தினமான நேற்று தேவாலயங்களை குறிவைத்து நடந்த கொடூர தாக்குதலில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 290 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    The Eiffel Tower in Paris, to pay tribute to the victims of terror attacks in Sri Lanka

    இந்த கொடூர சம்பவத்திற்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் உள்பட உலக நாடுகள் பல கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    கட்சியாக மாறிய பின் முதல் சவால்.. 4 தொகுதி இடைத் தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன் கட்சியாக மாறிய பின் முதல் சவால்.. 4 தொகுதி இடைத் தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன்

    இந்நிலையில் பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் இலங்கை குண்டு வெடிப்புக்காக அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஈபிள் டவரில் விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை இலங்கையில் ராணுவம் மற்றும் போலீசார் 24 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யார்? ஏன் செய்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

    English summary
    The Eiffel Tower in Paris, France is to turn off its lights to pay tribute to the victims of suicide blast attacks in Sri Lanka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X