பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரான்சில் பயங்கரம்.. சர்ச்சுக்குள் நுழைந்து.. பெண்ணின் தலையை துண்டித்த தீவிரவாதி.. மேலும் 2பேர் பலி

சர்ச்சில் பயங்கரவாதி நுழைந்து 3 பேரை கத்தியால் குத்தி கொன்றுள்ளான்

Google Oneindia Tamil News

பாரீஸ்: சர்ச்சுக்குள் கத்தியுடன் திடீரென நுழைந்த மர்மநபர், அங்கு பிரார்த்தனையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. இதில் ஒரு பெண்ணின் தலையை அப்படியே துண்டித்து எடுத்த கொடூரமும் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது!

பாரிஸை சேர்ந்தவர் சாமுவேல் பெடி.. இவர் ஒரு வரலாற்று ஆசிரியர்.. சமீபத்தில், நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டி உள்ளார்.. இது பிரான்ஸ் நாட்டின் சார்லி ஹேப்டோ என்ற ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்தது... இதனால், கடந்த 16-ம் தேதி இவரது தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டு விட்டார். இந்த சம்பவம் உலகம் முழுதும் ஷாக்கை தந்தது.

Three dead as woman beheaded in knife attack at French Church

இதையடுத்து சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.. இதில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கலந்து கொண்டார்.. அப்போது அவர் பேசியபோது, "கார்டூன் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை" என்று கூறினார்.. இம்மானுவேலின் இந்த கருத்துக்கு துருக்கி, பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் கடும் கண்டனம் எழுந்தன.

இந்த சம்பவத்துக்கு பிறகு பிரான்சுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே கருத்து மோதலும் அதிகமானது.. இதில் முக்கியமானது துருக்கிதான்.. இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக்கி பிரான்சை விமர்சித்து வருகிறது.

இதையடுத்து, துருக்கி அதிபர் எர்டோகனை விமர்சித்து மறுபடியும் அதே பத்திரிகையில் கார்டூன் வெளியானது.. இதை பார்த்த ஈரான் பத்திரிகை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலை அரக்கனாக சித்தரித்து ஒரு கார்டூன் வெளியிட்டது. இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் கார்டூனை வரைந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த சமயத்தில்தான் ஒரு பயங்கரமான சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது.. அங்குள்ள நைஸ் நகரில் ஒரு சர்ச் உள்ளது.. இன்று மதியம் அங்கு பலர் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது திடீரென மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் உள்ளே நுழைந்துவிட்டார்.. யாரெல்லாம் அங்கிருந்தார்களோ, அவர்கள் எல்லார் மீதும் கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதலையும் நடத்தினார்.

இதில் அதிர்ச்சியுற்ற மக்கள் சிதறி ஓடினர்.. அந்த சர்ச்சில் இருந்து தப்பித்து செல்லவும் முயன்றனர்.. இந்த தகவல் அறிந்து அதற்குள் போலீசார் அங்கு வந்துவிட்டனர்.. கையில் கத்தியுடன் வெறிபிடித்து அலைந்து குத்தி கொண்டிருந்த அந்த நபரை கைது செய்தனர்.. அத்துடன் இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்றும் அறிவித்தனர்.

நான் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்... கமலா ஹாரிஸ் நான் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்... கமலா ஹாரிஸ்

அந்த நபர் கத்தியால் குத்தியதில் மொத்தம் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. இதில் ஒரு பெண்ணும் அடங்குவார்.. அவரது தலையை கத்தியால் துண்டித்து கொலை செய்துள்ளார் அந்த நபர்.. மேலும் பலர் ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடி வருகின்றனர்.. அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இதையடுத்து கைதான அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், நபிகள் நாயகத்தின் கார்டூனை படிக்கும் மாணவர்களிடம் காட்டிய சாமுவேல் பெடியின் செயலுக்குதான் இந்த தண்டனை என்று வாக்குமூலம் தந்துள்ளார். சர்ச்சுக்குள் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்த சம்பவம் உலக நாடுகளில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

English summary
Three dead as woman beheaded in knife attack at French Church
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X