பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொப்பி.. தொப்பி.. கொரோனாவை தடுக்க சீன அரசரின் ஐடியாவைக் கையில் எடுத்த பாரிஸ் அருங்காட்சியகம்!

பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய, பாரிஸ் அருங்காட்சியகத்தில் நீண்ட தொப்பிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Google Oneindia Tamil News

பாரிஸ்: பாரிஸ் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களிடையே சமூக இடைவெளியை உறுதி செய்ய நீண்ட தொப்பிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதுமே இன்று கொரோனாவோடு வாழப் பழகத் தொடங்கி இருக்கின்றன. கொரோனாவிடம் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மாஸ்க் அணிவதையும், கைகளை சுத்தமாக கழுவுவதையும் மக்கள் தாங்களாகவே செய்து கொள்கின்றனர். ஆனால் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது தான் மிக கடினமான விஷயமாக இருக்கிறது. கூட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் கூட மக்கள் நெருக்கமாகவே நிற்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

Memes: வட்டமா இருந்துச்சா.. சமூக இடைவெளினு நெனச்சு கால வச்சேன்.. அப்பறம் அது பாதாள சாக்கடையா பேச்சு!Memes: வட்டமா இருந்துச்சா.. சமூக இடைவெளினு நெனச்சு கால வச்சேன்.. அப்பறம் அது பாதாள சாக்கடையா பேச்சு!

சூப்பர் ஐடியா

சூப்பர் ஐடியா

எனவே தான் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று அருமையான ஐடியா ஒன்றை செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது. மிக நீளமான இறக்கைகளைக் கொண்ட வண்ண மயமான தொப்பிகளை பார்வையாளர்களை அணியச் செய்வது தான் அது.

நீளமாக தொப்பி

நீளமாக தொப்பி

அருங்காட்சியகத்துக்கும் வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் அந்த தொப்பிகள் கொடுக்கப்படுகின்றன. அதை அணிவதன் மூலம் ஒருவருடன் மற்றொருவர் மிக நெருக்கமாக தொடர்பு கொள்வது தவிர்க்கப்படும். எனவே கொரோனா பரவலை தடுக்கும், சமூக இடைவெளி இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

சாங் அரசப் பரம்பரை

சாங் அரசப் பரம்பரை

கொரோனா மட்டுமல்ல, இந்த தொப்பி யோசனையும் சீனாவுக்கு சொந்தமானது தான். கி.பி. 960 முதல் 1276 வரை சீனாவை ஆண்ட சாங் அரச பரம்பரை கடைப்பிடித்த பழக்கம் தான் இந்த நீண்ட தொப்பி அணியும் வழக்கம்.

கிசுகிசுவை தவிர்க்க

கிசுகிசுவை தவிர்க்க

அரசு ஊழியர் கிசுகிசு பேசுவதை தடுப்பதற்காக சாங் ராஜ்ஜியத்தின் முதல் அரசரின் மூளையில் உதித்த ஐடியா தான் இது. தலையில் இருந்து மூன்று அடி வெளியே நீண்டிக்கொண்டு இருக்கும் இறக்கைகளையுடைய இந்த தொப்பியை ஊழியர்கள் அணிவதன் மூலம், அவர்கள் சத்தமாக தான் பேச முடியும் என அந்த அரசர் நம்பியிருக்கிறார்.

முதல் நாடு

முதல் நாடு

இதன் மூலம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஆரம்பித்த முதலாவது நாடு எனும் பெருமை சீனாவுக்கு இருப்பதாக கேலியாக குறிப்பிடுகிறார் பாரிஸ் 59 ரிவோலி அருங்காட்சியகத்தின் தொப்பி வடிவமைப்பாளர் டோமினிக் பாசோல். "இந்த தொப்பிகள் கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், சில விஷத்தன்மை கொண்ட மனிதர்களிடம் இருந்தும் நம்மை தற்காக்கும்", என்கிறார் அவர்.

ஐடியா மணி பட்டியல்

ஐடியா மணி பட்டியல்

அதேபோல தான் ரோமானியா நாட்டைச் சேர்ந்த செருப்பு வியாபாரி ஒருவர் மக்களிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்த, முன் பக்கம் மிக நீநீநீண்டட... ஷூக்களை செய்து ஐடியா மணி என பெயர் வாங்கினார். தற்போது அந்த பட்டியில் பாரிஸ் தொப்பியும் சேர்ந்திருக்கிறது. மேலும் இதுபோல் என்ன ஐடியாக்கள் எல்லாம் வரப்போகிறது என்பதை பொறுத்திருத்திருந்து பார்ப்போம்.

English summary
An art gallery in Paris is ensuring people follow social distancing guidelines by providing hats with winged extensions to visitors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X