• search
பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

4வது அலை.. கதற விடும் கொரோனா.. அதிபருக்கு எதிராக கொந்தளித்த மக்கள்.. பிரான்சில் வெடித்தது கலவரம்..!

Google Oneindia Tamil News

பாரீஸ்: "எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்று சொல்லி, நிறைய கட்டுப்பாடுகளை விதித்தார் பிரான்ஸ் அதிபர்.. அவ்வளவுதான்.. பாரீஸ் நகரமே கலவரமாகிவிட்டது.. மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்

இந்த கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று... இங்கு தொற்றின் 2வது அலை மிக அதிகமாகவே இருந்தது..

அதுபோலவே 3வது அலையின் பாதிப்பும் மிக மோசமாக இருந்தது.. இதன்காரணமாக, எந்த நேரததிலும் 4-வது அலை வந்துவிடும் என்று அங்குள்ள சுகாதார நிபுணர்களே வார்னிங் தந்துள்ளனர்..

பாரீஸ் பயங்கரம்.. காவல்துறை தலைமையகத்திற்குள் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்.. 4 அதிகாரிகள் பலி பாரீஸ் பயங்கரம்.. காவல்துறை தலைமையகத்திற்குள் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்.. 4 அதிகாரிகள் பலி

வைரஸ்

வைரஸ்

இப்படிப்பட்ட சூழலில்தான் அந்நாட்டின் அதிபர் ஜின் கேஸ்டெக்ஸ், பிரான்ஸில் டெல்டா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பகிரங்கமாகவே தெரிவித்தார்.. "நாம் இப்போது 4வது அலையில் இருக்கிறோம்.. நம்மை டெல்டா வைரஸ் ஆதிக்கம் செலுத்து வருகிறது.. இது ரொம்ப மோசமான தொற்றுத்தன்மை வாய்ந்தது.. தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

ஆனாலும் ஒட்டுமொத்த பிரான்ஸை கொரோனா தன் பிடியில் வைத்துள்ளது.. இதுவரை 58 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்... ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை பல்வேறு வழிகளில் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது... அதிபரும் நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்..!

விபரீதம்

விபரீதம்

ஆனால் விபரீதத்தை புரிந்து கொள்ளாமல், அந்த நாட்டு மக்கள் பிரச்சனை செய்து வருகிறார்கள்.. அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் தெருவில் இறங்கி போராடவே ஆரம்பித்துவிட்டனர்..
இந்த போராட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டு தலைநகர் பாரீசுக்கு சென்றுள்ளனர்..

அதிகாரிகள்

அதிகாரிகள்

ஆயிரக்கணக்கானோர் மொத்தமாக வருவதை கண்டு, அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறிவிட்டனர்.. அப்போது பைக்கில் 12 போலீஸ் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர்.. அவர்களையும் போராட்டக்காரர்கள் சரமாரியாக தாக்கவிட்டதால், திடீரென அங்கு பரபரப்பு சூழ்ந்து கொண்டது.. உடனடியாக பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.. ஆனாலும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை போலீசாரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை..

  Coronavirus தோற்றம்.. Wuhan-ல் மீண்டும் ஆய்வு செய்ய WHO முடிவு.. எதிர்க்கும் China
  கலவரம்

  கலவரம்

  போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் போலீசார் மீது தூக்கி தூக்கி வீசியெறிந்தனர்.. அதேபோல் போலீசாரும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.. கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர்.. அப்போதும் அவர்களை கன்ட்ரோல் செய்ய முடியாததால், தடியடியும் நடத்தினர்... இதனால் பாரீஸ் நகரமே கொஞ்ச நேரத்தில் கலவர பூமியாகியது..

  தடுப்பூசியை போட்டுக்கொள்ள சொன்னதுக்கே இப்படியா?!

  English summary
  Violence in the struggle against coronavirus in France
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X