பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

34 எலும்புக்கூடுகள்.. 16 மண்டை ஓடுகள்.. ரயிலில் கடத்த முயன்ற மர்ம நபர்.. பகீர் காரணம்!

பீகாரில் எலும்புக்கூடுகளை கடத்த முயன்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிகாரில் ரயிலில் கடத்த முயன்ற 16 மண்டை ஓடுகள்... பகீர் பின்னணி- வீடியோ

    பாட்னா: பீகாரில் எலும்புக்கூடுகளை ரயிலில் கடத்த முயன்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    பொதுவாக தற்போது ரயில் மூலமாக நடக்கும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. முக்கியமாக வடஇந்தியாவில் ரயிலை பயன்படுத்தி அதிக அளவில் போதை பொருள் கடத்தப்படுகிறது.

    ஆனால் ரயிலில் எலும்புக்கூடுகளை கடத்திய சம்பவம் இப்போதுதான் முதல்முறை அரங்கேறி உள்ளது. எலும்புகூடுகளை எடுத்து சென்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    எலும்புகளை எடுத்து வந்தார்

    எலும்புகளை எடுத்து வந்தார்

    பீகாரின் சப்பாரா ரயில்வே ஜங்சனில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. சஞ்சய் பிரசாத் என்ற நபர், அந்த ரயில் நிலையத்திற்கு பெரிய பெரிய மூட்டைகளுடன் வந்துள்ளார். இந்த மூட்டைகள் முழுக்க எலும்புக்கூடுகள் இருந்துள்ளது. இதை வெளியே தெரியாதது போல் கட்டி எடுத்து வந்துள்ளார்.

    என்ன இருந்தது

    என்ன இருந்தது

    அந்த மூட்டைகளில் மொத்தம் 34 எலும்புக்கூடுகள், 16 மண்டை ஓடுகள் இருந்துள்ளது. அதேபோல் பூட்டானில் பயன்படுத்தும் பூட்டான் ரூபாயும் இருந்துள்ளது. சில வெளிநாட்டு ஏடிஎம் அட்டைகள், மற்றும் ஒரு வெளிநாட்டு சிம் கார்ட் இருந்துள்ளது. சந்தேகத்தின் பெயரில் அவரை சோதனை செய்த போலீசார் உடனே அவரை கைது செய்தனர்.

    விளக்கம் அளித்தார்

    விளக்கம் அளித்தார்

    இந்த மூட்டையை அவர் உத்தர பிரதேசத்தின் பாலியா என்ற பகுதியில் இருந்து எடுத்து வந்துள்ளார். பூட்டான் சென்றுவிட்டு, பின் அங்கிருந்து மீண்டும் மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பாய்குரியில் இதை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அங்கிருக்கும் சில சாமியார்களிடம் இதை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கடும் விசாரணை

    கடும் விசாரணை

    ஒரு ரகசிய பூஜைக்காக இதை கொடுக்க அவர் எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் பூஜை விவரங்கள் வெளியே தெரிவிக்கப்படவில்லை. போலீசார் அவரை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

    English summary
    16 human skulls, 34 skeletal found in Bihar railway station: One arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X