பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிதிஷ் ஆட்சிக்கு வந்த சோதனை.. ஜேடியூ எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் ஜேடியூ எம்.எல்.ஏ. அமரேந்திர குமார் பாண்டேவின் ஆதரவாளர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை செய்யபப்ட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தலின் போது முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை காட்டாட்சி தர்பார் என கடுமையாக விமர்சித்தது ஜேடியூ- பாஜக தரப்பு. தற்போது ஜேடியூ-பாஜக வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதல்வராகி உள்ளார்.

2 supporters of Bihar JDU MLA shot dead

பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்ற நிலையில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட மேவாலால் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ஆளும் ஜேடியூ கட்சியின் எம்.எல்.ஏ. அமரேந்திர குமர் பாண்டேவின் ஆதரவாளர்கள் 2 பேரை 4 பேர் கொண்ட கும்பல் சுட்டுப் படுகொலை செய்தது. கோஷ்டி மோதல் காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கொலையாளிகளில் 2 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

English summary
2 supporters of Bihar JDU MLA Amrendra Kumar Pandey shot dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X