பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல் கூட்டத்தில் புல்வாமா வீரர்களுக்கு அஞ்சலி.. காங்கிரஸ் மீது புகார்களை அடுக்கிய மோடி!

பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் புல்வாமாவில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் புல்வாமாவில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பீகாரில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கட்சி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை இன்று நடத்தியது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கலந்து கொண்டது.

இதில் பிரதமர் மோடி பீகாரின் வளர்ச்சி குறித்து பேசினார். பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால் கதையே வேறு.. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!ரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால் கதையே வேறு.. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பீகார் தேர்தல்

பீகார் தேர்தல்

பீகார் தேர்தல் கூட்டத்தில் புல்வாமாவில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. அவர் அஞ்சலி செலுத்திய போது அங்கிருந்த பாஜகவினர் கரகோஷம் செய்தனர். ஜெய் ஹிந்த், பாரத் மாதா கீ ஜே என்று கூச்சலிட்டனர்.

பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி

அதன்பின் பேசிய மோடி, பீகாரில் கல்வியின்மையை பாஜக சரி செய்யும். பீகார் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதே பாஜகவின் நோக்கம். பீகார் இளைஞர்களுக்கு வரும் ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். பீகார் விவசாயிகள் பாஜக ஆட்சி மூலம் அதிக பலன் அடைந்துள்ளனர்.

நிறைய திட்டம்

நிறைய திட்டம்

விவசாயிகளுக்காக பாஜக நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பீகாரில் உள்ள பல அரசியல்வாதிகள் நிறைய ஊழல்களை செய்துள்ளனர். என்னை காங்கிரஸ் விமர்சனம் செய்ய முயல்கிறது: ஆனால் நான் உஷாராக உள்ளேன். காங்கிரஸ் விமர்சனங்கள் எதிர்கொள்ள எனக்கு தெரியும்.

ஊழல் பக்கம்

ஊழல் பக்கம்

எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் எந்த நல்லதும் நடக்காது. எதிர்க்கட்சியினர் மட்டுமே முன்னேறிக்கொண்டு இருப்பார்கள். லாலு பிரசாத் யாதவ் தொடங்கி ஊழல் செய்தவர்கள் எல்லோரும் எதிர்க்கட்சியின் பக்கம் இருக்கிறார்கள். பாஜக மக்கள் பக்கம் இருக்கிறது, என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
2019 Lok Sabha election: PM Modi pays tribute to Pulwama attack martyrs in Bihar rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X