பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்.. அதிக சீட் கேட்கும் லாலு.. புதிய சிக்கல்!

பீகாரில் காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. லோக் சபா தேர்தலில் போட்டியிடும் வகையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது.

அங்கு பாஜக மிகவும் வலுவான கட்சியாகும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் அங்கு கூட்டணி உருவாக்கி உள்ளது.

பீகார்

பீகார்

காங்கிரஸ் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிட்ட மாநிலம் என்றால் அது பீகார்தான். அதன்படி காங்கிரஸ் பீகாரில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பெரிய மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் முதல்முறை கூட்டணி உருவாக்கி இருக்கிறது.

என்ன கூட்டணி

என்ன கூட்டணி

காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பீகாரில் தற்போது காங்கிரஸ், ஆர்எல்எஸ்பி (ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி), ராஷ்டிரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளது. இன்னும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளது. இதில் ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி சில நாட்களுக்கு முன்புதான் பாஜகவில் இருந்து பிரிந்து காங்கிரசுடன் இணைந்தது. இதன் மூலம் பீகாரில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் பீகாரில் காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. சீட் ஒதுக்கீடு தொடர்பாக உடன்படிக்கை ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக வரும் பிப்ரவரி முதல் வாரம் ஆலோசனை நடத்த காங்கிரஸ் -ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் முடிவெடுத்து இருக்கிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

பீகாரில் மொத்தம் 40 லோக் சபா இடங்கள் உள்ளது. இதில் காங்கிரஸ் 15 இடங்கள் கேட்பதாக கூறப்படுகிறது. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ஆர்எல்எஸ்பி தலா இரண்டு இடங்கள் கேட்க உள்ளது. இதனால் ராஷ்டிரிய ஜனதா தளம் 20 இடங்கள் வரை பெறும். ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் 23 இடங்களுக்கும் குறைவாக போட்டியிடும் திட்டத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதான் தற்போது பிரச்சனையாக மாறியுள்ளது.

 பீகார் முக்கியம்

பீகார் முக்கியம்

உத்தர பிரதேசம் போலவே பீகாரும் மிக முக்கியமான மாநிலம் ஆகும். பாஜக இங்கு அதிக தொகுதிகளை வெல்வதில் குறியாக உள்ளது. இங்கு அதிக இடங்களை வெல்லும்பட்சத்தில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர உதவியாக இருக்கும். சென்ற முறை 2014ல் நடந்த தேர்தலில் பாஜக அங்கு 40க்கு 31 இடங்களை வென்று சாதனை படைத்தது. இதனால் காங்கிரஸ் கூட்டணி இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
2019 Lok Sabha election: A small rift between RJD and Congress in the great alliance in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X