பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களை ஏமாற்றிவிட்டார்.. பிரசாந்த் கிஷோர் மீது 420 வழக்கு.. புகார் கொடுத்தது யார் தெரியுமா?

பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு எதிராக 420 மற்றும் 406 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பாட்னா: பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு எதிராக 420 மற்றும் 406 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக பீகாரில் அளிக்கப்பட்ட புகாரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் கடந்த மாதம் தனது கட்சியில் இருந்து துணை தலைவர் பிரசாந்த் கிஷோரை நீக்கினார். சிஏஏ சட்டம் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த சட்டத்தை ஜேடியூ துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்தார். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.

ரஜினி போட்ட போடு.. பாஜக கப்சிப்.. ஒருத்தரும் கருத்து சொல்லலையே.. ஏன் இந்த மயான அமைதி?!ரஜினி போட்ட போடு.. பாஜக கப்சிப்.. ஒருத்தரும் கருத்து சொல்லலையே.. ஏன் இந்த மயான அமைதி?!

என்ன செய்கிறார்

என்ன செய்கிறார்

பீகாரில் தற்போது பிரசாந்த் கிஷோர் பாட் கி பீகார் என்ற தலைப்பில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன் மிகப்பெரிய இளைஞர் படையை உருவாக்க அவர் முடிவெடுத்துள்ளார். இதற்காக பீகார் முழுக்க அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அடுத்த 100 நாட்களுக்கு பீகார் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

பெரிய திட்டம்

பெரிய திட்டம்

மாநிலம் முழுக்க இருக்கும் இளைஞர்களை இணைக்க உள்ளார். பீகாருக்கு புதிய தலைவர் வேண்டும் என்று நம்பும் மக்களை ஒன்றாக இணைத்து மாற்றம் கொண்டு வர போகிறேன். சுமார் 1 கோடி இளைஞர்களை அவர் இணைக்க உள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமாரை தோல்வி அடைய செய்வதற்காக பிரஷாந்த் கிஷோர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்கு பாட் கி பீகார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு

வழக்கு

இந்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோருக்கு எதிராக 420 மற்றும் 406 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக பீகாரில் அளிக்கப்பட்ட புகாரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. பாட் கி பீகார் என்பது காங்கிரஸ் கட்சிக்கு பிரஷாந்த் கிஷோர் உருவாக்கி கொடுத்த வாசகம் ஆகும். பிரஷாந்த் கிஷோர், காங்கிரஸ் உடன் ஒப்பந்தம் செய்து, அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, பாட் கி பீகார் என்ற வசனத்தை உருவாக்கினார்.

காங்கிரஸ் வழக்கு

காங்கிரஸ் வழக்கு

ஆனால் இதை காங்கிரஸ் பயன்படுத்தும் முன்பே, பிரஷாந்த் கிஷோர் பயன்படுத்தி உள்ளார். இது ஒருவகையில் இந்திய தண்டனை சட்டப்படி மோசடி ஆகும். 420 சட்டப்பிரிவு படி ஏமாற்றுதல், மக்களை ஏமாற்றி நேர்மையற்ற வகையில் பொருளை ஒப்படைக்க தூண்டுதல் அல்லது பொய்யான ஆவணமொன்றை உருவாக்குதல் அல்லது மறைத்தல், தவறான வாக்கியங்களை மக்களை தூண்டும் வகையில் உருவாக்குதல் ஆகியவை தவறானது ஆகும்.

புதிய சண்டை

புதிய சண்டை

இதனால் தற்போது தங்களை ஏமாற்றிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த பீகார் உறுப்பினர் ஷாஷாங் கவுதம் சார்பாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஷாஷாங் கவுதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். பாஜகவை மிக தீவிரமாக பிரஷாந்த் கிஷோர் எதிர்த்து வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் பீகாரில் பிரஷாந்த் கிஷோரை எதிர்க்க தொடங்கி உள்ளது.

English summary
A case under 420 section filed against Prashant Kishore for plagiarism in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X