பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலுக்கு பிறகு நிலைமை மாறும்.. தேஜஸ்வி-சிராக் கூட்டணி அமையும்.. ஏபிபி-சிவோட்டர் சர்வே சொல்கிறது

Google Oneindia Tamil News

பாட்னா: தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி (எல்ஜேபி) பீகார் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைக்க கூடும் என்று 53% பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று என்று ஏபிபி-சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அதே நேரத்தில் 46.7% பேர் இருவருக்கும் இடையே எந்த கூட்டணியும் அமையாது என்று கருதுகின்றனர்.

ABP-CVoter Opinion Poll: 53% Believe LJP-RJD May Join Hands Post Polls

சிராக் பாஸ்வான் பீகார் தேர்தலில் தனியாக போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், ஒரு பக்கம் பிரதமர் மோடியை பாராட்டுகிறார். தேர்தலுக்கு பின்பு பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் பேசுகிறார். இந்த நிலைப்பாடு 57.7% வாக்காளர்களை குழப்பமடையச் செய்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

சிராக் பாஸ்வான், தேஜஸ்வியை "தம்பி" என்று குறிப்பிட்டு பரப்புரை செய்திருந்தார். ஜமுய் (சிராக் பாஸ்வானின் தொகுதி) தொகுயில் நடந்த ஒரு பேரணியில் தேஜஸ்வி பேசுகையில், நிதிஷ் குமாரை அதிகாரத்திலிருந்து அகற்ற, தேவைப்பட்டால் எல்ஜேபியுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறியிருந்தார்.

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்.. நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி செம போட்டி.. ஏபிபி-சி வோட்டர் சர்வேமக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்.. நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி செம போட்டி.. ஏபிபி-சி வோட்டர் சர்வே

இந்த நிலையில்தான், கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், சிராக் பாஸ்வான்-தேஜஸ்வி யாதவ் கூட்டணி அமைப்பார்கள் என கூறியுள்ளனர்.

English summary
53% are of the opinion that Tejashwi Yadav led Rashtriya Janta Dal (RJD) and Chirag Paswan led Lok Jansahakti Party (LJP) may join hands post polls, a survey conducted by ABP-CVoter has found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X