பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பசி, அதீத வெப்பத்தால் இறந்த பெண்.. தாய் இறந்தது கூட தெரியாமல் எழுப்பும் பிஞ்சுக் குழந்தையின் துயரம்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் உள்ள ரயில் நிலையத்தில் பசி மற்றும் அதிக வெப்பத்தால் உயிரிழந்த தாயை விளையாடுவதற்காக எழுப்பும் இந்த சின்னஞ்சிறு குழந்தையின் செயல் மனதை கவலையடையச் செய்கிறது. அது போல் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த இரு வயது குழந்தையும் இறந்துவிட்டது.

Recommended Video

    காசு இல்ல பசி இருக்கு • Kushboo வெளியிட்ட விடியோ |Bihar Migrant women

    லாக்டவுனால் வேலையை இழந்து பசியும் பட்டினியுமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பி சென்று வருகிறார்கள். அவ்வாறு செல்வோர் செல்லும் வழியில் பல துயரங்களை அடைகிறார்கள்.

    வழியில் யாரேனும் உணவு கொடுத்தால் சாப்பிடுகிறார்கள், இல்லாவிட்டால் பட்டினியுடன் மூட்டைகளை சுமந்து கொண்டு நடந்தே செல்கிறார்கள். இவ்வாறு செல்வோரில் பலர் வீடு திரும்புவதற்கு முன்பே சாலை விபத்துகளிலோ, பசியாலோ இறந்துவிடுகிறார்கள்.

    புதுச்சேரியில் முதல் நாள் 3 கோடியே 83 லட்சத்திற்கு மது விற்பனை..அடுத்தடுத்த நாட்களில் விற்பனை மந்தம்புதுச்சேரியில் முதல் நாள் 3 கோடியே 83 லட்சத்திற்கு மது விற்பனை..அடுத்தடுத்த நாட்களில் விற்பனை மந்தம்

    உடல்நலக் குறைவு

    உடல்நலக் குறைவு

    இந்த நிலையில் குஜராத்திலிருந்து ரயில் மூலம் பீகார் மாநிலம் கட்டிஹாருக்கு செல்ல 23 வயது தாய், அவரது குழந்தை, உள்பட சில குடும்ப உறுப்பினர்கள் ரயிலில் பயணித்தனர். அப்போது அந்த 23 வயது பெண்ணுக்கு வழியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அங்கேயே மயங்கி விழுந்து அவர் இறந்துவிட்டார்.

     23 வயது பெண்

    23 வயது பெண்

    இதையடுத்து குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முஸாஃபர்பூர் ரயில்நிலையத்தில் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். ரயில் நிலையத்தில் இறந்த அந்த பெண்ணை கிடத்தியிருந்தார்கள். தாய் இறந்ததை அறியாத 2 வயது குழந்தை தனது தாய் படுத்துள்ள துணியை பிடித்து இழுக்கிறது.

    அசைவின்றி கிடந்த தாய்

    அசைவின்றி கிடந்த தாய்

    துணிதான் நகருகிறதே தவிர அவரது தாய் அசைவின்றி கிடக்கிறார்கள். இது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. புலம்பெயர்ந்த தொழிலாளரான இவர் நீண்ட நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை. மேலும் அதிக வெப்பத்தால் நீர் சத்து குறைந்து உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    ரயில் பயணம்

    ரயில் பயணம்

    அது போல் இன்னொரு துயரச் சம்பவம் அதே ரயில் நிலையத்தில் நடந்தது. 2 வயது குழந்தையும் பசி கொடுமையாலும் அதிக வெப்பத்தாலும் இறந்துவிட்டது. இந்த குழந்தையின் குடும்பத்தினர் டெல்லியிலிருந்து ரயில் மூலம் பயணம் செய்தனர்.

    English summary
    A baby tries to wake up its mother who died because of hunger, massive heat in Bihar Railway station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X