பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு- பீம் ஆர்மியின் பாரத் பந்த்- அரசியல் கட்சிகள் ஆதரவு

Google Oneindia Tamil News

பாட்னா: இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பீம் ஆர்மியின் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Bhim Army’s Bharat Bandh against SC order against Reservation

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிரொலித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பீம் ஆர்மி இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இதுக்கே பயப்படும் ரஜினி... எப்படி முதலமைச்சர் ஆவார்..? -கவுதமன் கேள்விஇதுக்கே பயப்படும் ரஜினி... எப்படி முதலமைச்சர் ஆவார்..? -கவுதமன் கேள்வி

பீகாரில் பீம் ஆர்மியின் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல் உபேந்திர குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, பப்பு யாதவின் ஜன் ஆதிகார் கட்சி ஆகியவையும் இம்முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

சத்ரா யுவ சங்கர்ஷ் சமிதி உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளும் இம்முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. பீகார் மட்டுமல்லாது உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

English summary
Bhim Army called Bharat Bandh on today against the Supreme Court order on Reservation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X