பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகின. இங்கு வசிக்கும் சுமார் 25 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

Bihar: 8 children dead & 9 injured after lightning struck

நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது தீடிரென மின்னல் தாக்கியது. இதில் 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 8 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, மழை வெள்ளத்தில் சிக்கி 92 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

English summary
Bihar: 8 children dead & 9 injured after lightning struck Dhanapur village in Nawada. More details awaited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X