பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார்: காங். மேலும் 49 வேட்பாளர்களை அறிவித்தது- சத்ருகன் சின்ஹா மகன், சரத்யாதவ் மகள் போட்டி!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேலும் 49 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் சத்ருகன் சின்ஹா மகன் லவ் சின்ஹாவும் வேட்பாளராக இடம்பெற்றுள்ளார்.

பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Bihar Assembly Election 2020: Cong. releases second list of 49 candidates

பீகார் தேர்தல் களத்தில் பிரசாரம் களை கட்ட தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் தலைதூக்கும் அதிருப்தி வேட்பாளர்கள் தூக்கி அடிக்கப்பட்டு வருகின்றனர்.

மூப்பனார், ஜெ., சசிகலா- தினகரனிடம் உச்சகட்ட விசுவாசத்தின் அடையாளமாக இருந்தவர் வெற்றிவேல்!மூப்பனார், ஜெ., சசிகலா- தினகரனிடம் உச்சகட்ட விசுவாசத்தின் அடையாளமாக இருந்தவர் வெற்றிவேல்!

இந்த நிலையில் 2, 3-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் 49 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா, பங்கிபுர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் லோக் தந்திரிக் கட்சித் தலைவரான சரத் யாதவ் மகள் சுஹாசினி, பிகாரிகஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார்.

English summary
Congress has announced its second list of candidates for the upcoming assembly elections in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X