பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தல் 2020: கொரோனா தடுப்பூசி இலவசம் - பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிடுகிறது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. பாஜக அறிக்கையை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

அக்டோபர் 28ஆம் தேதி மொத்தம் 71 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 2வது கட்டமாக நவம்பர் 3ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஜேடியூ-பாஜக கூட்டணியில் பாஜக 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜேடியூ 122 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சியான ஹெச்.ஏ.எம்க்கு 7 தொகுதிகளை ஜேடியூ ஒதுக்கியுள்ளது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பாஜக போட்டியிடும் தொகுதிகள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள்

ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 243 தொகுதிகளில், 121 இடங்களில் போட்டியிடுகிறது. தனக்கு ஒதுக்கப்பட்ட 121 இடங்களில் விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு 11 இடங்களை ஒதுக்கியது. இதன்மூலம், பாஜக 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மாற்றத்துக்கான ஆவணம் 2020

மாற்றத்துக்கான ஆவணம் 2020

பீகார் சட்டசபைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை நேற்று வெளியிட்டது. தலைநகர் பாட்னாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நடிகரும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான ராஜ் பப்பர் மாற்றத்துக்கான ஆவணம் 2020 என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்

தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்

விவசாய கடன் தள்ளுபடி, மின்கட்டண தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதி அதிகரிக்கப்படும் என்றும், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் முழுமையாக அகற்றப்பட்டு மாநில அளவிலான விவசாய சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் உள்ள மக்களுக்கு பீகாரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் இடம் பெறுமா

முக்கிய அம்சங்கள் இடம் பெறுமா

பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியான நிலையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Bharatiya Janata Party (BJP) today released a statement containing election promises for the Bihar Assembly elections. Union Finance Minister Nirmala Sitharaman today released. Union Minister Ravi Shankar Prasad is also participating in the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X