பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?- எண் கணித நிபுணர் டாக்டர் என்எஸ் செல்வன் கணிப்பு

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி அரியணை ஏறப்போவது யார் என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பது பலரது கேள்வி. தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் 15 ஆண்டுகாலம் பீகாரில் முதல்வராக அரியணையில் அமர்ந்து இருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் குடும்பம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் வனவாச நிலைமையில்தான் இருக்கிறது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி (எல்ஜேபி) கடும் போட்டியை நிதிஷ்குமாருக்கு கொடுத்து வருகின்றனர். இந்த மும்முனை போட்டியில் வென்று ஆட்சியை பிடிப்பது யார் என்று கணித்துள்ளார் பிரபல எண் கணித நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன்.

பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக மொத்தம் 71 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தல் வாக்குறுதிகள்,குற்றச்சாட்டுகள் என அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்துள்ளது.

2வது கட்டமாக நவம்பர் 3ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது

தேர்தல் நடைபெறும் நாள், தேர்தல் முடிவு வெளியாகும் நாள், முதலமைச்சர் வேட்பாளர்களின் பெயர்கள் எண் கணிதப்படி கணித்து இந்த தேர்தல் வெற்றி யாருக்கு சாதகமாக இருக்கும் என்று கணித்துள்ளார் எண் கணித நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன்.

ஹாலோவீன் ஸ்பெஷல்.. நாசா வெளியிட்ட 'ஜேக் - ஓ-லாந்தர்' சூரியன் போட்டோ.. பொருத்தமா இருக்கே!ஹாலோவீன் ஸ்பெஷல்.. நாசா வெளியிட்ட 'ஜேக் - ஓ-லாந்தர்' சூரியன் போட்டோ.. பொருத்தமா இருக்கே!

பீகாரில் மும்முனை போட்டி

பீகாரில் மும்முனை போட்டி

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் மாநில முதல்வர் நிதிஷ் குமார் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதே போல ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். லோக் ஜன சக்தி கட்சி சார்பில் ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார்.

தேஜஸ்வி ராசி எண் கூட்டத்தொகை

தேஜஸ்வி ராசி எண் கூட்டத்தொகை

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், சிறு வயதிலேயே பதவிக்கு வந்தவர். தேஜஸ்வி யாதவின் பெயர் எண் கூட்டுத்தொகை 8. இவரது பிறந்த நாள் கூட்டுத்தொகை. பிறந்த நாள் 9-11-1989 கூட்டு எண் 2, இவருக்கு 30 வயதுதான் ஆகிறது. கட்சியின் பெயர் எண் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டுத்தொகை 41 கூட்டு எண் 5. இந்த கட்சியின் மூலம் பெரிய வளர்ச்சி கண்டவர் லாலு பிரசாத் யாதவ்.

தேர்தல் முடிவு நாள்

தேர்தல் முடிவு நாள்

நவம்பர் 10ஆம்தேதி தேர்தல் முடிவுகள் வருகின்றன. 10- 11 -2020 கூட்டுத்தொகை 7 வருகிறது. என்னதால் குட்டிக்கரணம் போட்டாலும் இவரால் முதல்வராக வர முடியாது காரணம் பெயர் எண், பிறந்தநாள் தேஜஸ்வி பிரசாத் யாதவ், இந்த பெயரில் உள்ள Sad உச்சரிப்பு சரியில்லாமல் இருக்கிறது. இதுதான் இவரை முன்னேற விடாமல் தடுக்கிறது.

ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி குறைவுதான்

ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி குறைவுதான்

இவருக்கு இவரை பிடிக்காது இவருடைய விதி எண் 38 கூட்டுத்தொகை 2 பெயர் எண்ணை பிறந்த எண்ணிற்கு சாதகமாக வைத்துக்கொள்ள வேண்டும். கட்சியின் பெயர் எண் 5ல் உள்ளது. தேர்தல் தேதியும், ரிசல்ட் எண்ணும் இவருக்கு சாதகமாகவே இருக்கிறது. பெயர் எண் சரியாக இல்லாத காரணத்தால் 100க்கு 33 மதிப்பெண்தான் பெறுவார். இவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

வெற்றி வாய்ப்பு எப்படி

வெற்றி வாய்ப்பு எப்படி

நிதிஷ்குமார் பெயர் எண் வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் பெயர் எண் கூட்டும்தொகை 34 கூட்டுத்தொகை 7. பிறந்த நாள் 01/03/1951 கூட்டுத்தொகை 2. கட்சியின் பெயர் ஜனதாதள் கூட்டுத்தொகை 21 வருகிறது. ரிசல்ட் நாள் 7 வருகிறது. நிதிஷ் குமாருக்கு எல்லாமே சாதகமாகவே இருப்பதற்குக் காரணம் பிறந்த நாள் 1 அனைத்திலும் நம்பர் 1ஆக வர காரணமாக இருக்கிறது. விதி எண் 2 மக்களிடையே வெற்றியை தக்க வைத்துக்கொள்ள காரணமாகவே இருக்கிறது. இவருக்கு எல்லாமே சாதகமாகவே இருந்தாலும் ஒருவித மன கலக்கத்திலேயே இருக்கிறார்.

நிதிஷ்குமார் வெற்றி வாய்ப்பு அதிகம்

நிதிஷ்குமார் வெற்றி வாய்ப்பு அதிகம்

தேர்தல் முடிவு வரும் நாள் நவம்பர் 10, 2020 கூட்டுத்தொகை 7 வருகிறது. இதுவும் நிதிஷ்குமாருக்கு சாதகமாகவே இருக்கிறது. மிகப்பெரிய மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெறுவார். பெயர் எண், விதி எண், தேர்தல் முடிவு வெளியாகும் எண் கூட்டுத்தொகை அனைத்தும் நிதிஷ்குமாருக்கு சாதகமாகவே இருக்கிறது. இவர் 100க்கு 66 வாங்கி விடுவார் என்றே கூறலாம்.

நிதிஷ்குமார் கூட்டணிக்கு எத்தனை இடங்கள்

நிதிஷ்குமார் கூட்டணிக்கு எத்தனை இடங்கள்

பீகார் தேர்தலில் மொத்தமுள்ள 243 இடங்களில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கு மொத்தம் 170 இடங்கள் கிடைத்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தேஜஸ்வி யாதவ் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 66 இடங்கள் கிடைக்கும். பிற கட்சிகளுக்கு 7 இடங்கள் கிடைக்கும். தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் இந்த கணிப்பு எந்த அளவிற்கு பலித்திருக்கிறது என்று பார்க்கலாம்.

English summary
Many are questioning who will win the Bihar assembly elections. Incumbent Chief Minister Nitish Kumar has been the Chief Minister of Bihar for 15 years. Lalu Prasad Yadav's family has been in exile for almost 15 years. The Rashtriya Janata Dal (RJD) led by Tejaswi Yadav and the Lok Jana Shakti Party (LJP) led by Chirac Paswan are giving Nitish Kumar a tough fight. Renowned Numerologist Dr. JNS Celvan has predicted who will win this three-way contest and take over the reigns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X