பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்: பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா ஜேடியூ? சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூகம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூகம்? | JDU may break the alliance with BJP

    பாட்னா: பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியூ (ஐக்கிய ஜனதா தள்) விலகக் கூடும் என்பதற்கான சமிக்ஞைகளை முதல்வர் நிதிஷ்குமார் வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார் என்கின்றன தகவல்கள்.

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொருவிதமான நிலைப்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். பீகாரில் கடந்த 2015-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார்.

    இக்கூட்டணியும் அமோகவெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இது பாஜகவுக்கு பெரும் தோல்வியாக கருதப்பட்டது. ஆனால் ஆர்ஜேடியுடனான கூட்டணியை திடீரென முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்துக் கொண்டார்.

    கட்டி உருள போகுது லோக்கல் காங்கிரஸ்.. நாங்குநேரியில் தாறுமாறாக வெடித்த கோஷ்டி பூசல்!கட்டி உருள போகுது லோக்கல் காங்கிரஸ்.. நாங்குநேரியில் தாறுமாறாக வெடித்த கோஷ்டி பூசல்!

    மோடிக்கு எதிராக போர்க்கொடி

    மோடிக்கு எதிராக போர்க்கொடி

    அதற்கு முன்னரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் ஜேடியூ இடம்பெற்றிருந்து. 2014 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது ஜேடியூ.

    அதிருப்தியில் பாஜக

    அதிருப்தியில் பாஜக

    அந்த வரலாறை மறந்துவிட்டு மீண்டும் மோடி தலைமையை ஏற்றுக் கொண்டது ஜேடியூ. இந்த கூட்டணியும் சர்ச்சைகளுடனும் சலசலப்புகளுடனும்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலின் போது பாஜகவுக்கு 17 இடங்களைத்தான் ஜேடியூ ஒதுக்கியது. இதற்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு உருவானது.

    அமைச்சரவையில் ஜேடியூ அதிருப்தி

    அமைச்சரவையில் ஜேடியூ அதிருப்தி

    லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஜேடியூவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் கூடுதல் அமைச்சரவை இடங்களைக் கேட்டு போராடியது ஜேடியூ. பாஜக மேலிடம் இதற்கு மறுப்பு தெரிவிக்க அமைச்சரவையில் இடம்பெறமாட்டோம் என்றே அறிவித்தது ஜேடியூ.

    பாட்னா சாலைக்கு நேரு பெயர்

    பாட்னா சாலைக்கு நேரு பெயர்

    இந்நிலையில் பாட்னாவில் சாலை ஒன்று நேருவின் பெயரை சூட்டியிருக்கிறார் முதல்வர் நிதிஷ்குமார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் கொள்கையை கூட்டணி கட்சியான பாஜக கடுமையாக தாக்கி வரும் நிலையில் நிதிஷ்குமார் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளவும் தயார் என்கிற ஜேடியூவின் சமிக்ஞைதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    அதிரடி அரசியல் முடிவுகள்

    அதிரடி அரசியல் முடிவுகள்

    இதனிடையே வறட்சி, வெள்ளம் போன்றவற்றை பீகார் அரசு சரியாக கையாளவில்லை என்கிற அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தியை சமாளிக்க சில அதிரடி அரசியல் முடிவுகளை எடுத்தாக வேண்டிய நிர்பந்தமும் நிதிஷ்குமாருக்கு இருக்கிறது. ஆகையால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்குவதற்குள் பாஜகவுடனான கூட்டணிக்கு குட்ட்பை சொல்லிவிடுவார் நிதிஷ்குமார் என்றே கூறப்படுகிறது.

    English summary
    According to the sources JDU may break the alliance with BJP before the Bihar Assembly Elections 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X