பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் வாக்காளர் பட்டியலில் 3 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் வாக்காளர்களாக சேர்ப்பு

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெயர் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பீகார் சட்டசபைக்கான தேர்தல் எந்த நிமிடத்திலும் அறிவிக்கப்படலாம். பீகாரில் ஆளும் ஜேடியூ-பாஜக மற்றும் ஆர்ஜேடி-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

எதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க்கும் போடல.. பிரதமர் பிறந்தநாள் விழாவில் இப்படியா? பாஜக தந்த ஷாக்எதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க்கும் போடல.. பிரதமர் பிறந்தநாள் விழாவில் இப்படியா? பாஜக தந்த ஷாக்

3 லட்சம் பேர் வாக்காளர்கள்

3 லட்சம் பேர் வாக்காளர்கள்

ஆர்ஜேடி-காங்கிரஸ் அணியில் இடதுசாரிகளும் இணைந்துள்ளன. பீகார் தேர்தலை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அடுத்தடுத்து தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில் பிற மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் முக்கிய சக்திகளாக தேர்தல் களத்தில் உருவெடுத்துள்ளனர். பீகாரில் இடம்பெயர் தொழிலாளர்கள் இதுவரை 3 லட்சம் பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

திரும்பிய 30 லட்சம் பேர்

திரும்பிய 30 லட்சம் பேர்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் அதிகாரிகள், 30 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பி உள்ளனர். இவர்களில் 10% முதல் 12% பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை. இப்போது இவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 3 லட்சம் பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.

முதல் முறையாக வாக்களிப்பு

முதல் முறையாக வாக்களிப்பு

அதேநேரத்தில் 87% இடம்பெயர் தொழிலாளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் வந்து அவர்கள் வாக்களித்ததும் இல்லை. இம்முறைதான் முதல் முறையாக சொந்த மாநிலத்தில் இவர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் அதிகாரிகள்.

பீகார் வாக்காளர்கள்

பீகார் வாக்காளர்கள்

கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்ட உத்தேச வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 7,18,22,450 பேர் வாக்காளர்கள். இவர்களில் 3,79,12,127 பேர் ஆண்கள்; 3,39,07,979 பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 2,344 பேர்.

English summary
3 lakh returnee migrant workers added to voters’ list in Bihar for the upcoming Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X