பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்: இதென்ன புதுகலாட்டா.... அடுத்தடுத்து பாஸ்வான் கட்சிக்கு தாவும் பாஜக தலைவர்கள்

Google Oneindia Tamil News

பாட்னா: பாஜகவுடன்தான் கூட்டணி வைப்போம் என ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்குறது ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி. ஆனால் பாஜகவில் இருந்து அடுத்தடுத்த தலைவர்கள் பாஸ்வான் கட்சிக்கு தாவி வருவது புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28-ல் தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 10-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

காங்., பாஜகவுக்காக மாநில கட்சிகளின் முதுகில் குத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பாஸ்வான் கட்சி! காங்., பாஜகவுக்காக மாநில கட்சிகளின் முதுகில் குத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பாஸ்வான் கட்சி!

பாஸ்வான் கட்சி

பாஸ்வான் கட்சி

பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுவிட்டது. இதேபோல் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளும் தொகுதிப் பங்கீட்டை அறிவித்திருக்கின்றன. ஆனால் பாஸ்வானின் லோக்ஜனசக்திதான் பாஜகவுடன் கூட்டணி என கதறிக் கொண்டிருக்கிறது.

பாஜகவுக்கு உதவும் பாஸ்வான் கட்சி

பாஜகவுக்கு உதவும் பாஸ்வான் கட்சி

அந்த கட்சியைப் பொறுத்தவரையில் நிதிஷ்குமாரின் செல்வாக்கை அழிக்க, ஜேடியூவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவதில் முனைப்பாக இருக்கிறது. இது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதாயம் தேடித் தரும் நடவடிக்கை என்பதை தெரிந்தே பாஸ்வான் கட்சி இப்படி முடிவெடுத்திருக்கிறது,

பாஸ்வான் கட்சிக்கு தாவல்

பாஸ்வான் கட்சிக்கு தாவல்

இந்நிலையில் பாஜகவுக்கு புதிய தலைவலியாக அந்த கட்சியின் தலைவர்கள் அடுத்தடுத்து பாஸ்வான் கட்சியில் இணைந்து வருகின்றனர். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேந்திரசிங் திடீரென பாஸ்வான் கட்சியில் இணைந்தார். 2015- தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராக இருந்தவர் இந்த ராஜேந்திரசிங்,

2-வது பாஜக தலைவர்

2-வது பாஜக தலைவர்

இவரைத் தொடர்ந்து தற்போது மற்றொரு மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவரான உஷா வித்யார்தியும் பாஸ்வானின் லோக் ஜனசக்தியில் ஐக்கியமாகி உள்ளார். பீகாரை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் பாஸ்வான் கட்சியில் இணைந்திருக்கிறேன் என்கிறார் உஷா வித்யார்தி.

English summary
BJP senior leader Usha Vidyarthi today joined Ramvilas Paswan's LJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X