பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்கள் மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்தக்கூடாது.. பீகார் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபையில் என்ஆர்சிக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் தொடரில் இரண்டாவது நாளான இன்று , பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்தக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியது.

Bihar Assembly passes resolution to not implement NRC

இருப்பினும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) அதன் 2010 வடிவத்தில் செயல்படுத்த ஒரு தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றினர்.

முன்னதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி போன்ற பிரச்சினைகள் குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

முன்னதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், "தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து 'சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை' தவிர்க்க கோரி பீகார் அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது" என்று கூறியிருந்தார்.

நிறைய சிக்கல்கள்.. முணுமுணுப்புகள்.. அதிருப்திகள்.. ரிப்பேர் செய்வதில் அதிரடி காட்டுமா திமுக?நிறைய சிக்கல்கள்.. முணுமுணுப்புகள்.. அதிருப்திகள்.. ரிப்பேர் செய்வதில் அதிரடி காட்டுமா திமுக?

முன்னதாக என்பிஆர் விவகாரம் பீகாரில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. முஸ்லிம் அமைப்பினர் பலரும் என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஷ்வி யாதவ், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) மக்களை தவறாக வழிநடத்தியதாக முதல்வர் நிதீஷ் குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

குடிமக்கள் தேசிய பதிவு (என்.ஆர்.சி) மற்றும் என்.பி.ஆர் ஆகியவை "கறுப்புச் சட்டங்கள்" என்று கூறிய தேஜஸ்வி, புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் நாட்டைப் பிளவுபடுத்துகின்றன என்று குற்றம்சாட்டி இருந்தார்.

English summary
Bihar Assembly passes resolution to not implement NRC .The Assembly also passed a resolution to implement NPR in its 2010 form
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X