பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாற்று சாதனை படைத்த நிதிஷ்குமார்... பீகார் முதலமைச்சராக 4-வது முறை இன்று பதவியேற்கிறார்...!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று 4-வது முறையாக பதவி ஏற்று அம்மாநில அரசியலில் வரலாற்று சாதனை படைக்கவுள்ளார்.

Recommended Video

    #Breaking மீண்டும் பீகாரின் முதல்வரானார் நிதிஷ்குமார்..!

    பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி மொத்தம் 125 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

    பீகாரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள். இந்த நிலையில் பீகாரில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

    திடீர்னு என்னாச்சு.. முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லையா.. பாஜக தலைவர்கள் சொல்வது என்ன..?திடீர்னு என்னாச்சு.. முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லையா.. பாஜக தலைவர்கள் சொல்வது என்ன..?

    பாட்னாவில் ஆலோசனை

    பாட்னாவில் ஆலோசனை

    பாட்னாவில் ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பங்கேற்றார். பீகாரில் பாஜகவை விட மிக குறைவான இடங்களில்தான் ஜேடியூ வெற்றி பெற்றுள்ளது. பாஜக 74 இடங்களிலும் ஜேடியூ 43 இடங்களிலும் வென்றிருக்கிறது.

    முதல்வராக நிதிஷ்குமார்

    முதல்வராக நிதிஷ்குமார்

    இருப்பினும் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி ஜேடியூவின் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக நேற்றைய கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனடிப்படையில் அக்கூட்டத்தில் நிதிஷ்குமார் ஒருமனதாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    துணை முதல்வர் யார்?

    துணை முதல்வர் யார்?

    துணை முதல்வர் பதவிக்கு பாஜகவின் காமேஸ்வர் செளபால் பெயர் அடிபடுகிறது. 1980களில் விஸ்வ ஹிந்து பரிஷத்தில் பணியாற்ற தொடங்கியவர். அயோத்தி ராமஜென்ம பூமி இயக்கத்தில் முக்கிய பங்கெடுத்தவர் என்பதால் காமேஸ்வர் செளபால், துணை முதல்வராக வாய்ப்பு உள்ளது.

    நிதிஷ்குமார் நாளை பதவியேற்பு

    நிதிஷ்குமார் நாளை பதவியேற்பு

    பீகாரில் மீண்டும் முதல்வராக 4-வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்க உள்ளார். நிதிஷ்குமார் முதல்வராக பதவி ஏற்றாலும் அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட கட்சி என்பதால் ஆட்சியின் கடிவாளம் பாஜகவிடமே இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

    English summary
    Bihar BJP lead alliance MLAs to meet on Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X