பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

24 மணி நேரத்தில் 700 கி.மீ. தூரம் பயணித்த மாணவன்.. 10 நிமிட லேட்டால் நீட் தேர்வு எழுத முடியாத நிலை

Google Oneindia Tamil News

பாட்னா: நீட் தேர்வு எழுத கொல்கத்தாவில் உள்ள தேர்வு மையத்தை அடைய 19 வயது மாணவன் ஒருவர் பீகார் மாநிலத்திலிருந்து 24 மணி நேரத்தில் 700 கி.மீ. தூரத்தை அடைந்தும் 10 நிமிடங்கள் தாமதமானதால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு குளறுபடி நடந்துள்ளது என்றே சொல்லலாம்.

தேர்வு மையம் என்பதில் பெரும் குளறுபடி நடந்ததாக பரவலாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீகாரில் உள்ள ஒரு மாணவனுக்கு கொல்கத்தாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளனர். தேர்வு மையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் அவரால் தேர்வு எழுத முடியாத சூழல் எழுந்தது.

நீட், கொரோனா- கிசான் திட்ட முறைகேடு-10 பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் பதிலை கேட்கும் கமல்ஹாசன் நீட், கொரோனா- கிசான் திட்ட முறைகேடு-10 பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் பதிலை கேட்கும் கமல்ஹாசன்

சந்தோஷ் குமார்

சந்தோஷ் குமார்

பீகார் மாநிலம் , தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் யாதவ் (19). இவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இவர் இந்த தேர்வுக்காக பல மாதங்களாக தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

கொல்கத்தா

கொல்கத்தா

இதையடுத்து யாதவ், சனிக்கிழமை காலை 8 மணிக்கு தர்பங்காவிலிருந்து பஸ் மூலம் முஸாஃபர்நகர் சென்றார். அங்கிருந்து பேருந்து மூலம் பாட்னா சென்றுள்ளார். பின்னர் போக்குவரத்து பாதிப்பால் 6 மணி நேரம் தாமதமானது. இதையடுத்து பாட்னாவிலிருந்து கொல்கத்தாவுக்கு அன்று இரவு 9 மணிக்கு வந்துள்ளார்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

பின்னர் ஷீல்தா ரயில்நிலையத்தை மதியம் 1.06 மணிக்கு அடைந்தார். அங்கிருந்து தேர்வு மையத்திற்கு டாக்ஸியில் சென்றுள்ளார். தேர்வு மையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். 24 மணி நேரத்தில் 700 கி.மீ. தூரம் பயணம் செய்தும் 10 நிமிடங்கள் தாமதத்தால் அவரை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

ஓராண்டு வீண்

ஓராண்டு வீண்

இதுகுறித்து மாணவன் சந்தோஷ் யாதவ் கூறுகையில் நான் அந்த அதிகாரிகளிடம் எவ்வளவோ கெஞ்சி கேட்டேன். தேர்வு மதியம் 2 மணிக்குத்தான் தொடங்கியது. நான் அந்த சென்டரில் 1.40 மணிக்கு சென்றுவிட்டேன். ஆனால் தேர்வு மையத்திற்கு 1.30 மணிக்கு வர கெடு விதிக்கப்பட்டது. வெறும் 10 நிமிடங்கள் தாமதத்தால் என் இந்த ஓராண்டு வீணாகிவிட்டது என்றார்.

English summary
Bihar boy travels 700 km to go to Neet exam centre but somehow he missed the exam by reached 10 minutes late.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X