பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வாயை மூடு.. நண்பனோட மகனா போயிட்டே.. இல்லாட்டி".. கொந்தளித்த நிதீஷ் குமார்.. பீகாரில் பரபரப்பு!

தேஜஸ்வி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் நிதிஷ்குமார்

Google Oneindia Tamil News

பாட்னா: ''உங்களை துணை முதல்வராக்கியது யார்? என் ஃபிரண்டோட அப்பா என்பதால் நான் பொறுமையா இருக்கேன்.. அவங்க அப்பாவை முதல்வராக்கியது யார் தெரியுமா" என்று பீஹார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவிடம், முதல்வர் நிதிஷ் குமார் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 125 இடங்களை கைப்பற்றி, தே.ஜ. கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார், மறுபடியும் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்று கொண்டுள்ளார்.

 சரமாரி விமர்சனம்

சரமாரி விமர்சனம்

இந்நிலையில், பீகார் சட்டசபை கூட்டத்தின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், நேற்று முன்தினம் துவங்கியது... இதில் நேற்றைய தினம், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதல்வர் நிதிஷ் குமார் லாலு குடும்பத்தை சரமாரியாக விமர்சித்தார்.. தனிப்பட்ட முறையில் தன்னுடைய அப்பாவையும், குடும்பத்தையும் விமர்சித்தது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ஆத்திரப்பட்டார்.

 அபத்தமான பொய்

அபத்தமான பொய்

அதனால், நிதிஷ் குமாரின் மீதான பழைய ஊழல் புகார், கிரிமினல் குற்றச்சாட்டை பற்றி லிஸ்ட் போட்டு கூறினார்.. இதை கேட்டு பொறுமையே இழந்துவிட்டார் நிதிஷ்.. "தேஜஸ்வி சொல்வதெல்லாம் அபத்தமான பொய்... அவர் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு நான் வாய் மூடிட்டு இருக்கேன் என்றால், அதுக்கு ஒரே காரணம், அவர் என்னோட நண்பனின் மகன் என்பதாலும், சகோதரராக இருப்பவரின் மகன் என்பதாலும்தான்.

 ஆதாரமற்றவை

ஆதாரமற்றவை

அவரது அப்பாவை சட்டமன்ற தலைவராக்கியது யார் தெரியுமா? தேஜஸ்வியை துணை முதல்வராக்கியது யார் தெரியுமா? வாய் இருக்கிறது என்பதற்காக எதையாவது பேசக்கூடாது.. என் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாமே ஆதாரமற்றவை என கோர்ட்டே ஏற்றுக் கொண்டுள்ளது.

முதல்வர்

முதல்வர்

ஆனால், இன்னும் தேஜஸ்வி பொய் சொல்லி கொண்டு இருக்கிறார்.. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. இவர் மீது, ஊழல் புகார்கள் நிறைய வந்தது... அதைபற்றி முதல்வர் என்ற முறையில் தேஜஸ்வியிடம் கேட்டேன்... ஆனால் அவர் அதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.. அதனால்தான் 2017ல் மெகா கூட்டணியிலிருந்து விலகினேன்" என்று நிதிஷ் ஆவேசமாக பேசியதால், சற்று நேரம் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

டென்ஷன்

டென்ஷன்

மலை மாதிரி இருக்கும் பாஜக - நிதிஷ்குமாருடன் இந்த முறை தேர்தலில் நேரடியாக தேஜஸ்வி மோதியபோதே கவனத்தை ஈர்த்தார்..கடுமையான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டும், வரவேற்கக்கூடிய தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டும் தேர்தலை சந்திக்கும்போது, பாஜகவுக்கே ஒரு நடுக்கம் உள்ளூர வந்தும் போனது.. இறுதியில் பெருமளவு பெற்றியை தேஜஸ்வி பிடிக்கவில்லையென்றாலும், தற்போது வரை நிதிஷ் - பாஜக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி தரும் வகையிலும், எரிச்சல் தரும் வகையிலும், பேசி வருவதே, மாநில அரசுக்கு டென்ஷனை எகிறி வைத்து வருகிறது!

English summary
Bihar Chief Minister Nitish Kumar's personal attack On Lalu family
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X