பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம்- மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைனுக்கும் இடம்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. முன்னாள் மத்திய இணை அமைச்சரான பாஜகவின் இஸ்லாமிய முகங்களில் ஒருவருமான ஷாநவாஸ் ஹூசைன், நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி அரசு, முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் பாஜக- ஜேடியூ இடையே உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டும் இருக்கிறது.

பீகார் எம்.எல்.சி தேர்தலில் மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன்- வேட்பாளராக்கிய பாஜக வியூகம் என்ன? பீகார் எம்.எல்.சி தேர்தலில் மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன்- வேட்பாளராக்கிய பாஜக வியூகம் என்ன?

80 நாட்களுக்கு பின்..

80 நாட்களுக்கு பின்..

இதனால் பீகார் அமைச்சரவை விரிவாக்கம் என்பது தாமதமாகிக் கொண்டே இருந்தது. நிதிஷ்குமார் முதல்வராக பதவி ஏற்று 80 நாட்களுக்கு பின்னரே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த தாமதத்துக்கு பாஜகதான் காரணம் என பொதுவெளியில் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்திருந்ததும் பரபரப்பை கிளப்பியது.

தற்போது 14 அமைச்சர்கள்

தற்போது 14 அமைச்சர்கள்

இந்நிலையில் பாட்னாவில் இன்று நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போதைய நிலையில் நிதிஷ்குமாருடன் சேர்த்து 14 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் 7 பேர் பாஜக எம்.எல்.ஏக்கள்; ஜேடியூவுக்கு 5; கூட்டணி கட்சிகளான ஆவாம் மோர்ச்சா, விஐபி கட்சிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதிஷ்குமார்- ஷாநவாஸ் ஹூசைன்

நிதிஷ்குமார்- ஷாநவாஸ் ஹூசைன்

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் அண்மையில் பீகார் எம்.எல்.சி. தேர்தலில் வெற்றி பெற்றவருமான பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹூசைனும் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். பீகாரைப் பொறுத்தவரை நிதிஷ்குமார்- ஷாநவாஸ் ஹூசைன் இடையே எப்போதும் மோதல்தான். 2014 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்தார் ஷாநவாஸ் ஹூசைன். ஆனால் கிடைக்கவில்லை. 2019 லோக்சபா தேர்தலில் சீட்டு கூட அவருக்கு தரப்படவில்லை. இதற்கு நிதிஷ்குமார்தான் காரணம் எனவும் ஷாநவாஸ் புகார் கூறியிருந்தார்.

நிதிஷ் எதிர்ப்பு அரசியல்

நிதிஷ் எதிர்ப்பு அரசியல்

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்காக அங்கே சென்று 1 மாதமாக முகாமிட்டு பணியாற்றி பாஜக பெரும் வெற்றியை தேடி தந்தார். இதற்கு பரிசாகவே பீகார் எம்.எல்.சி.யாக, அமைச்சராக்கப்பட்டுள்ளார் ஷாநவாஸ் ஹூசைன். உருது மொழியில் ஷாநவாஸ் பதவியேற்றுக் கொண்டார். அதேநேரத்தில் என்னதான் கூட்டணியாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் வெளியேற காத்திருக்கும் ஜேடியூவுக்கு எதிரான வியூகங்களை ஷாநவாஸ் ஹூசைன் மேற்கொள்வார் என்கிற நம்பிக்கையில் பீகார் அரசியலில் களமிறக்கியிருக்கிறதாம் பாஜக.

English summary
Bihar Chief Minister Nitish Kumar will expand his cabinet today. Senior BJP leaders Shahnawaz Hussain is likely to get ministerial post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X