பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் நெருங்கும்போதா இப்படி.. பீகார் எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவு! வெளியேறிய மாஜி முதல்வர் கட்சி

Google Oneindia Tamil News

பாட்னா: தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சி, மகாகட்பந்தன் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

பீகாரில், ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

ஆர்.ஜே.டி, காங்கிரஸ், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதபார்டி (ஆர்.எல்.எஸ்.பி) மற்றும் பாலிவுட் செட் டிசைனர், முகேஷ் சாஹ்னி தலைமையிலான விகாஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி) மற்றும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சி ஆகியவை எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்தன. இவை மகா கூட்டணி என பொருள்படும் வகையில் மகாகட்பந்தன் எனவும் பெயர் சூட்டின.

காலணா முதல் 10 காசு வரை.. தங்கத்தில் அள்ளிவீச தயாராகும் நித்யானந்தா.. பரபரக்கும் அறிவிப்புகள்காலணா முதல் 10 காசு வரை.. தங்கத்தில் அள்ளிவீச தயாராகும் நித்யானந்தா.. பரபரக்கும் அறிவிப்புகள்

வெளியேறும் கட்சி

வெளியேறும் கட்சி

ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) முடிவு செய்துள்ளது. ஜிதன் ராம் மஞ்சியின் இல்லத்தில் கூட்டப்பட்ட கட்சியின் மையக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் ரிஸ்வான் தெரிவித்துள்ளார்

லாலு மகன்

லாலு மகன்

"எச்ஏஎம் இனி மெகா கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்காது. மகாகட்பந்தனை விட்டு வெளியேற கட்சி முடிவு செய்துள்ளது" என்று ரிஸ்வான் தெரிவித்தார். லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஷ்வி பிரசாத் யாதவை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது, ஆர்.ஜே.டி. இதுதான் பிரச்சினையின் ஆரம்பம்.

கூட்டணிக்கு மதிப்பில்லை

கூட்டணிக்கு மதிப்பில்லை

"எங்கள் தலைவர் ஜீதன் ராம் மன்ஜி ஜீ, ஜனநாயக விதிமுறைகளைப் பின்பற்றாத மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கலந்து யோசிக்காத கூட்டணியைத் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்" என்கிறார் ரிஸ்வான்.

கட்சி இணைப்பு

கட்சி இணைப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூட சமீபத்தில் தனது கட்சியின் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தின் போது பேசுகையில், ஒரு வாரத்திற்குள் பீகார் மாநில கூட்டணி கட்சிகளிடையே ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று கூறியிருந்தார், ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. எந்தவொரு கூட்டணியில் சேருவது என்பதை இனிதான் முடிவெடுப்போம் என எச்ஏஎம் கட்சி தெரிவித்துள்ளது. அதே நேரம் ஐக்கிய ஜனதாதளத்துடன் எச்ஏஎம் இணைகிறதா என்று கேட்கப்பட்டதற்கு, "வேறு எந்த கட்சியுடனும் எங்கள் கட்சியை இணைக்கப்போவதில்லை" என்று ரிஸ்வான் தெரிவித்தார்.

English summary
Former chief minister Jitan Ram Manjhi-led Hindustani Awam Morcha (Secular) on Thursday quit the Grand Alliance (Mahagathbandhan), but chose to maintain silence on its future moves in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X