பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல்: ஜேடியூவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து ஆட்சி மன்ற குழுதான் முடிவெடுக்கும்- பாஜக

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கான (ஜேடியூ) தொகுதிப் பங்கீடு குறித்து கட்சியின் ஆட்சி மன்ற குழுதான் இறுதி முடிவெடுக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் இருப்பதால் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Bihar Election: BJP Parliamentary board will decide on seat share with JDU

இதற்காக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தல் கூட்டணி தொடர்பான பரபரப்பும் பீகாரில் அரங்கேறி வருகிறது. காங்கிரஸ்- ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா (மதசார்பின்மை) வெளியேறியது.

அதேநேரத்தில் காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இணைந்தன. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய கையோடு பாஜக-ஜேடியூவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜிதன் ராம் மஞ்சி கட்சி இணைந்தது. இதேபோல் நிதிஷ்குமாருடன் முரண்பட்டு நிற்கும் மூத்த தலைவர் சரத்யாதவும் ஜேடியூவுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழகத்திலும் பாஜக ராஜாதான்" எச். ராஜாவே சொல்லிட்டார்.. திமுக, அதிமுக கேட்டுச்சா?!

Recommended Video

    Bihar ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி கட்டிடம் .. பரபரப்பு வீடியோ| Oneindia Tamil

    இந்நிலையில் பாட்னாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சியின் ஆட்சி மன்ற குழுதான் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

    English summary
    BJP's Bihar Unit President Sanjay Jaiswal said that party Parliamentary board will decide on seat share with JDU.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X