பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதீஷ் குமார்?.. அதிர வைக்கும் எக்சிட் போல் முடிவுகள்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று இன்று இறுதிகட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மாலை 6 மணி முதல் எக்ஸிட் போல்கள் வெளியாகி வருகின்றன.

243 சட்டசபை தொகுதிகளில் 122 இடங்களை வெல்லும் அணி ஆட்சி அமைக்கும். பாஜக-ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய ஆளும் கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா, அல்லது ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பல அமைப்புகள்-டிவி சேனல்கள் தனித்தனியாக மாலை 6 மணிக்கு மேல், எக்சிட் போல்கள் வெளியிட்டு வருகின்றன. அனைத்து எக்சிட் போல் முடிவுகளையும் உடனுக்குடன் அறிய, இந்த லைவ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Newest First Oldest First
9:49 PM, 7 Nov

நியூஸ் எக்ஸ் டிவி ரிசர்ச் எக்ஸிட் போல் முடிவுகள்: ஜேடியூ-பாஜக அணிக்கு 110 முதல் 117 இடங்கள். ஆர்ஜேடி- காங். அணிக்கு 108 முதல் 123 இடங்கள். எல்ஜேபிக்கு 4 முதல் 10 இடங்கள். இதர கட்சிகளுக்கு 8 முதல் 23 இடங்கள்
9:12 PM, 7 Nov

இந்தியா டுடே ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகள்: பாஜக ஜேடியூ கூட்டணிக்கு 61 முதல் 91 இடங்கள். ஆர்ஜேடி-காங். இடது கூட்டணிக்கு 139- 161 இடங்கள். எல்ஜேபி 3 - 5 இடங்கள்
8:28 PM, 7 Nov

டுடே சாணக்யா எக்ஸிட் போல்: ஆர்ஜேடி- காங். அணிக்கு 180; ஜேடியூ-பாஜகவுக்கு 55
7:31 PM, 7 Nov

TV9 BHARATVARSH எக்ஸிட் போல் முடிவுகள்: ஆர்ஜேடி-காங். அணிக்கு 115 முதல் 125; பாஜக அணிக்கு 110-120; எல்ஜேபி 3-5 இடங்கள் கிடைக்குமாம்.
7:20 PM, 7 Nov

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இன்டியா எக்ஸிட் போல் முடிவு: குஜராத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளில் பாஜக 6 முதல் 7 தொகுதிகளில் வெல்லும்
7:20 PM, 7 Nov

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இன்டியா எக்ஸிட் போல் முடிவு: உ.பி.யில் இடைத்தேர்தல் நடைபெற்ற 7-ல் பாஜக 5 முதல் 6 தொகுதிகளில் வெல்லும்;
7:19 PM, 7 Nov

உ,பி, குஜராத் இடைத்தேர்தல்களில் பாஜக வெல்லும்- எக்ஸிட் போல் முடிவுகள்
6:53 PM, 7 Nov

பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- ஏபிபி எக்சிட் போல். பாஜக கூட்டணி 104-128 இடங்களைப் பெறும். மகாகட்பந்தன் 108-131 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு- ஏபிபி எக்சிட் போல்.
6:47 PM, 7 Nov

பீகாரில் 118 முதல் 138 இடம் வரை காங். கூட்டணி கைப்பற்றும் - ரிபப்ளிக் டிவி. பாஜக கூட்டணிக்கு 117 இடங்கள் வரை கிடைக்கலாம். லோக் ஜன சக்தி கட்சிக்கு 5 முதல் 8 இடம் வரை கிடைக்கலாம்.
6:39 PM, 7 Nov

சிவோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்: ஆர்ஜேடி-காங். கூட்டணி 120 இடங்களில் வெல்லும்; ஜேடியூ-பாஜகவுக்கு 116 இடங்கள் கிடைக்கும்
6:38 PM, 7 Nov

ம.பி. இடைத் தேர்தல்: பாஜக 16 முதல் 18 வரை வெற்றி பெறலாம். காங்கிரஸ் 10-12 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு- இந்தியா டுடே எக்சிட் போல்.
6:37 PM, 7 Nov

சிவோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின
6:31 PM, 7 Nov

பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 55.69%; 2-ம் கட்ட வாக்குப் பதிவில் 55.70%; 3-ம் கட்ட வாக்குப் பதிவில் 55.56% வாக்குகள் பதிவாகி உள்ளன.
6:30 PM, 7 Nov

2017-ல் ஆர்ஜேடி- ஜேடியூ- காங். கூட்டணி முறிந்தது. 71 இடங்களைப் பெற்ற ஜேடியூ, 53 இடங்களில் வென்ற பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
6:29 PM, 7 Nov

பீகாரில் 2015 சட்டசபை தேர்தலில் 80 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருந்தது ஆர்ஜேடி
6:27 PM, 7 Nov

இன்னும் சற்று நேரத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாக தொடங்கும்
6:27 PM, 7 Nov

India Today-Axis My India எக்ஸிட் போல் முடிவுகள் இரவு 7 மணிக்கு வெளியாகிறது
6:25 PM, 7 Nov

வட இந்திய மாநிலங்களில் பீகாரில் மட்டும்தான் பாஜக தனிப்பெரும் கட்சியாக இதுவரை உருவெடுக்கவிலை.
6:21 PM, 7 Nov

2015 பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-80; ஜேடியூ-71; காங். 27; பாஜக- 53; லோக் ஜனசக்தி 2; சிபிஐஎம்எல்-3; அவாமி மோர்ச்சா-1-ல் வென்றிருந்தன.
6:16 PM, 7 Nov

India Today Axis My India, ABP CVoter, Times Now CVoter ஆகியவை எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிடுகின்றன
6:14 PM, 7 Nov

பீகாரில் 2015 சட்டசபை தேர்தலின் போது எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தையும் பொய்யாக்கி ஜேடியூ-ஆர்ஜேடி-காங். கூட்டணி ஆட்சி அமைந்தது
6:12 PM, 7 Nov

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை ஜேடியூ-பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தன
6:08 PM, 7 Nov

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியில் ஆர்ஜேடி- 144; காங். 70; இடதுசாரிகள் 19 இடங்களில் போட்டியிட்டன; ஜேடியூ- பாஜக கூட்டணியில் ஜேடியூ-115; பாஜக 110 இடங்களில் போட்டியிட்டன
6:05 PM, 7 Nov

243 சட்டசபை தொகுதிகளில் 122 இடங்களை வெல்லும் அணி ஆட்சி அமைக்கும்
6:05 PM, 7 Nov

பீகார் சட்டசபை தேர்தல் எகிஸ்ட் போல் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன
6:04 PM, 7 Nov

பீகார் சட்டசபை தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்தது. நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
5:49 PM, 7 Nov

78 தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பீகாரில் மாலை 5 மணி வரை 52.80 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது
5:49 PM, 7 Nov

பீகாரில் மாலை 5 மணி வரை 52.80% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
5:41 PM, 7 Nov

பீகாரில் பிற்பகல் 3 மணி வரை 45.90 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
5:15 PM, 7 Nov

பூர்னியாவில், வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவை நிறுத்த முயன்ற கும்பலால் பரபரப்பு. கும்பலை விரட்ட காவல்துறையினர் வானை பார்த்து துப்பாக்கிச் சூடு.
READ MORE

Nitish kumar and Tejashwi Yadav
English summary
Bihar Election Phase 3 today: Voting will begin as usual at 7 am in Bihar but the period will be extended by one hour until 6 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X