பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.. மாலை 6 மணிவரை 53.54% வாக்குகள் பதிவு

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் அதன் முதல்கட்ட ஓட்டுப் பதிவு 71 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நடைபெற்று முடிந்தது.. மாலை 6 மணி வரை மொத்தம் 53.54% வாக்குகள் பதிவாகி இருந்தன. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழ்வில்லை.

Recommended Video

    Bihar-ல் ஆட்சியை பிடிக்கப் போவது யார்..? | Bihar Election Phase 1

    பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் அதன் முதல்கட்ட ஓட்டுப் பதிவு 71 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு துவங்கின. கொரோனா காலத்தில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பலப்படுத்தப்பட்டன

    Bihar election: First phase voting will be held today

    பீகாரின் திப்ரா பகுதியில் 2 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர். மற்றபடி பெரிய அளவில், எங்கும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லை. மதியம் 3 மணிவரை 46% வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை முதலே மக்கள் ஆர்வமாக ஓட்டுப் போட்டனர். தேர்வு மையங்களில் கொரோனா பரவல் தடுப்புக்கு நிறைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

    பீகாரில் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய மகா கட்பந்தன் அணி, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, அசாதுதின் ஓவைசி தலைமையிலான கூட்டணி என நான்கு முனைப் போட்டி நடக்கிறது. மொத்தம் 71 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. நவம்பர் 3ம் தேதி இரண்டாம் கட்டமாக 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 7ம் தேதி 78 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ம் தேதி வெளியாகும்.

    Bihar election: First phase voting will be held today

    என்.டி.ஏ கூட்டணியில், ஜே.டி.யு 115 இடங்களிலும், பாஜக 110, விகாஷீல் இன்சான் கட்சி 11 இடங்களிலும், ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன

    தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்! தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை! தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்! தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை!

    தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது மகாகத்பந்தன். இந்த கூட்டணியில், ஆர்ஜேடி 144 இடங்களிலும், காங்கிரஸ் 70, சிபிஐ-எம்எல் 19, இ.கம்யூ கட்சி ஆறு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்கு இடங்களிலும் போட்டியிடுகிறது. காலை 7 மணிக்கு துவங்கியுள்ள பீகார் ஓட்டுப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. நக்சல் பாதித்த பகுதிகளில் ஒரு மணி நேரம் முன்கூட்டியே வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

    Bihar election: First phase voting will be held today

    முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாநில அமைச்சர்களில் 6 பேர் போட்டியிடுகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி களத்தில் நிற்கும் மற்றொரு விஐபியாகும். 72 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட வாக்குபதிவு முடிந்த நிலையில் பிற்பகல் 6 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. பிற்பகல் 6 மணி நிலவரப்படி 53.54% வாக்குகள் பதிவாகி இருந்தன. இது 2020: 2015 தேர்தலை விட இந்த வாக்குபதிவு சதவீதம் குறைவு என்று கூறப்படுகிறது.

    மாலை 6 மணி வரை, ஷெய்க்புராவில் 55.96%, பாட்னாவில் 52.51%, போஜ்பூரில் 48.29%, பக்சரில் 54.07%, கைமூரில் 56.20%, ரோஹ்தாஸில் 49.59%, அர்வாலில் 53.85%, ஜெஹனாபாத்தில் 53.93%. %, கயா 57.05%, நவாடா 52.34%, ஜமுய் -57.41%. இது தவிர, பாகல்பூரில் 54.20%, பாங்காவில் 59.57%, முங்கரில் 47.36%, லகிசாரையில் 55.44% வாக்கு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Bihar Election Phase 1 today: Voting will begin as usual at 7 am in Bihar but the period will be extended by one hour until 6 pm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X