பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல்.. ஜெகனை போல் மாறும் தேஜஷ்வி யாதவ்.. கூடும் மாஸ் கூட்டம்.. மிரளும் பாஜக

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் முதல்வர் வேட்பாளராக தேஜஷ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டம் மிக அதிக அளவில் அலைமோதுவதால் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக, தேஜஸ்வி யாதவ்வின் தந்தை லாலு பிரசாத் யாதவ் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூடத்தான் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் பாருங்கள், பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வந்த பின்னர் எல்லாம் மாறும் என்று கூறியுள்ளது.

பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியும் மிகத்தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

என்னது 10 லட்சம் பேருக்கா.. தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியால் ஆடிப்போன நிதிஷ் குமார்.. கடும் பதிலடி என்னது 10 லட்சம் பேருக்கா.. தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியால் ஆடிப்போன நிதிஷ் குமார்.. கடும் பதிலடி

கூடும் மாஸ் கூட்டம்

கூடும் மாஸ் கூட்டம்

எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் லாலுபிரசாத் யாதவ்வின் மகன் தேஜஷ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கூடிய கூட்டத்தைப்போல் செல்லும் இடமெல்லாம் தேஜஷ்வி யாதவ்க்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஆளும் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகியவை அதிர்ச்சி அடைந்துள்ளன.

கூட்டம் ஏன்

கூட்டம் ஏன்

இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில். எதிர்க்கட்சித் தலைவர் தேஜஷ்வி யாதவின் பேரணிகளில் பெரும் கூட்டம் "இயற்கையானது" மற்றும் "அவரது தந்தை லாலு யாதவின் பேரணிகளின்போதும் நடந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு முஸ்லிம்கள் மற்றும் யாதவர்களின் வாக்கு வங்கி மிக அதிகமாகும். இந்நிலையில் அந்த கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம் உள்ள இடங்களில் கூட்டம் கூடுவது இயல்புதான் என்று பாஜக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக அளித்த பதில்

பாஜக அளித்த பதில்

விரைவில் பாருங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தொடங்கும் தேர்தலுக்காக பீகாரில் பிரச்சாரம் செய்யத் தொடங்கும் போது இந்த காட்சிகள் அப்படியே மாறும் என்று பாஜக உயர் வட்டாரங்கள் தெரிவித்தன .

நெருங்கும் தேர்தல்

நெருங்கும் தேர்தல்

தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வர வர, எதிர்க்கட்சி முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவின் பேரணிகளில் பெரும் கூட்டம் கூடும் படங்கள், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஆதரவாளர்களிடையே ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

English summary
The huge crowds at opposition leader Tejashwi Yadav's rallies are "natural" and "happened even during his father Lalu Yadav's rallies" but the picture will change when Prime Minister Narendra Modi starts campaigning in Bihar for the election starting next week, top BJP sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X