பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல்கட்ட தேர்தலில் களமிறங்கும் 375 கோடீஸ்வர வேட்பாளர்கள்

பீகாரில் மொத்தம் 1,064 வேட்பாளர்கள் போட்டியிடும் முதல் கட்ட தேர்தலில், 375 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உடைய கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது.

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1,064வேட்பாளர்கள் போட்டியிடும் முதல் கட்ட தேர்தலில், 375 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உடைய கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது. களத்தில் உள்ள மொத்த வேட்பாளர்களில் 35 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக மொத்தம் 71 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தல் வாக்குறுதிகள்,குற்றச்சாட்டுகள் என அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்துள்ளது.

2வது கட்டமாக நவம்பர் 3ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

பீகார் தேர்தல்.. கள நிலவரம் ரொம்ப வித்தியாசமா இருக்குது.. ரிசல்டுக்கு பிறகு பெரிய டிவிஸ்டுகள் வரும்பீகார் தேர்தல்.. கள நிலவரம் ரொம்ப வித்தியாசமா இருக்குது.. ரிசல்டுக்கு பிறகு பெரிய டிவிஸ்டுகள் வரும்

களத்தில் 1064 பேர்

களத்தில் 1064 பேர்

நாட்டின் 3வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட பீகாரில் 33.74 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
முதல் கட்டமாக 71 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பீகார் முதல் கட்ட தேர்தலில் 1064வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 35 சதவிகிதம் பேர் இளைஞர்கள் ஆவர்.

375 கோடீஸ்வர வேட்பாளர்கள்

375 கோடீஸ்வர வேட்பாளர்கள்

மொத்தம் 1,064 வேட்பாளர்களில், 375 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உடைய கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 42 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் தலா 6 கோடிக்கும் மேல் சொத்துக்களை கொண்டுள்ளனர்.

எந்த கட்சி வேட்பாளர்களுக்கு எத்தனை கோடி

எந்த கட்சி வேட்பாளர்களுக்கு எத்தனை கோடி

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 35 பேரில் 31 பேர் தலா 8 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது. பாஜகவின் 29 வேட்பாளர்களில் 24 பேர் தலா 3 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளவர்கள். 93 வேட்பாளர்கள் அல்லது 9% பேர் ரூ .5 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்

ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்

கயா மாவட்டத்தில் உள்ள ஆத்ரி தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மனோரமா தேவி ரூ.23.19 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ. 27 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உட்பட ரூ. 53 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது ரூ .89 கோடி மதிப்புள்ள அவரது குடும்ப சொத்துக்களைத் தவிர்த்து, பீகார் சட்டசபைத் தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தேவி பணக்கார வேட்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

English summary
375 (35%) candidates contesting in the first phase of Bihar Assembly elections are crorepati, said a report by Association for Democratic Reforms (ADR). A total of 1,064 candidates are in the fray in the phase 1 of Bihar election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X