பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிதிஷ் குமார் மிகவும் வலிமையானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. பாஜக கிரீன் சிக்னல்.. பீகாரில் திருப்பம்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரின் முகம் முதல்வர் நிதிஷ்குமார்தான், பீகார் வளர்ச்சிக்கு நிதிஷ் குமார் மிக முக்கியமான காரணமாக இருந்தார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பிரதமர் மோடி கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

பீகார் சட்டசபை தேர்தலை தற்போது நெருங்கி வருகிறது. விரைவில் பீகார் தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடவாய்ப்புள்ளது. பீகார் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது அங்கு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பீகார் சட்டசபையில் 243 இடங்கள் உள்ள நிலையில் 122 இடங்களில் வெற்றிபெற்றால் ஆட்சி அமைக்க முடியும். தற்போது பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது .

வெற்றி பெற எத்தனையோ வழிகள் இருக்கிறது... விபரீத முடிவு எடுக்க வேண்டாம் - முதல்வர் பழனிச்சாமி வெற்றி பெற எத்தனையோ வழிகள் இருக்கிறது... விபரீத முடிவு எடுக்க வேண்டாம் - முதல்வர் பழனிச்சாமி

கூட்டணி சிக்கல்

கூட்டணி சிக்கல்

இந்த நிலையில் பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன் தகவல் வந்தது. அங்கு பாஜக கட்சியின் சில உறுப்பினர்கள் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க விரும்பவில்லை என்று செய்திகள் வந்தது. அதேபோல் கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சியான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 30 இடங்களை போட்டியிட கேட்டதாக செய்திகள் வந்தது.

என்ன நிலைமை

என்ன நிலைமை

அதோடு பீகார் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு பதில் பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. இதனால் பீகாரில் என்டிஏ கூட்டணி முறிய போவதாக கணிக்கப்பட்டது. இதற்கான கூட்டணி பேரங்கள், இடங்கள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் மோடி நிதிஷ் குமாருக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

மோடி என்ன சொன்னார்

மோடி என்ன சொன்னார்

பிரதமர் மோடி இன்று பீகாரில் மூன்று பெட்ரோலிய திட்டங்களை திறந்து வைத்து நாட்டிற்காக அதை அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பீகார் பல வருடங்களாக வளர்ச்சியே இல்லாமல இருந்தது. இதற்கு முன் இருந்த பீகாரின் தலைவர்கள் யாரும் மாநில வளர்ச்சிக்கு உதவவில்லை. வேலைவாய்ப்பு,கல்வி , முன்னேற்றம், சாலை என்று எதிலும் பீகார் முன்னணி வகிக்கவில்லை.

முன்னணி வகிக்கவில்லை

முன்னணி வகிக்கவில்லை

பல வருடமாக முன்னேறாமல் இருந்த பீகார் கடந்த 5 வருடங்களில் முன்னேறி உள்ளது. 15 வருடமாக பீகார் வளர்ச்சி பாதையில் சென்று வருகிறது. பீகாரின் தோற்றம் மாற தொடங்கி உள்ளது. பீகாரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக நிதிஷ் குமார். பீகாரின் வளர்ச்சியில் , அரசியலில் மிக முக்கியமான நபர் நிதிஷ் குமார். நிதிஷ் குமார் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ளார்.

ஏற்க வேண்டும்

ஏற்க வேண்டும்

பீகாரின் முகத்தை பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் மாற்றியுள்ளார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பீகாரில் நிதிஷ் குமாரை என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பிரதமர் மோடியே கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். இதனால் பாஜக, எல்ஜேபி ஆகிய கட்சிகளும் நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. பாஜக கூறும் நபரை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார் என்று எல்ஜேபி ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Bihar Election: PM Modi says Nithish Kumar is an important leader in the state in his speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X