பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரிசல்ட்: எடுத்த எடுப்பிலேயே தட்டித் தூக்கிய பாஜக.. செம கடுப்பாகி டிவியை ஆப் செய்துவிட்ட லாலு..!

கடுப்பாகி டிவியை ஆப் செய்த லாலு பிரசாத் யாதவ்

Google Oneindia Tamil News

பீகார்: ஓட்டு எண்ணி கொண்டே இருந்தபோது, பாஜகதான் முன்னிலை என்று தெரிந்ததுமே லாலு டிவியை ஆப் செய்துவிட்டு, புல்வெளியில் போய் உட்கார்ந்து கொண்டாராம்!

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்... அவருக்கு சமீப காலமாக உடம்பும் சரியில்லை.. அதனால், ராஞ்சியின் ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் கெல்லி பங்களாவில் போலீஸ் காவலில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

Bihar election Result: Lalu Prasad switches off tv after seeing NDAs lead

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் எப்படியும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் அப்படித்தான் ரிசல்ட் வந்தது.. இதையடுத்து மத்திய பாஜக அரசின் மீதான வெறுப்பு, நிதிஷ்குமார் ஆட்சியின் மீதான சலிப்பு காரணமாகவே, இப்படி ஒரு முடிவுகள் வெளியாகி உள்ளதாக அந்த கருத்து கணிப்புகள் உணர்த்தின.

அதனால், பீகாரின் புதிய முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ்தான் பொறுப்பேற்பார் என்றும் நம்பப்பட்டன.. இதனால் நேற்று காலை முதலே அந்த கூட்டணி பெரும் உற்சாகத்தில் திளைத்தது. அதிலும் லாலு பிரசாத் யாதவ், தன் மகன் முதல்வர் ஆவார் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்.

பீகார் சட்டசபை தேர்தலில் 125 இடங்களில் பாஜக-ஜேடியூ அணி அமோக வெற்றி! ஆர்ஜேடி அணிக்கு 110 இடங்கள்! பீகார் சட்டசபை தேர்தலில் 125 இடங்களில் பாஜக-ஜேடியூ அணி அமோக வெற்றி! ஆர்ஜேடி அணிக்கு 110 இடங்கள்!

நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதுமே, கெல்லி பங்களாவில் உள்ள டிவியில் அவைகளை பார்த்து கொண்டிருந்தார்.. எடுத்த எடுப்பிலேயே ராஷ்ரிய ஜனதா தள கூட்டணிக்கு டஃப் தரும் வகையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியும் முன்னிலை வகித்து கொண்டிருந்தது.. இதை பார்த்த சோகத்தில் டிவியை ஆப் செய்துவிட்ட லாலு, பங்களாவில் உள்ள புல்தரையில் உட்கார்ந்து கொண்டு, சூரிய குளியல் எடுத்தாராம்!

English summary
Bihar election Result: Lalu Prasad switches off tv after seeing NDAs lead
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X