பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல்.. லாலு போட்ட அரசியல் கணக்கு.. மீண்டும் ஆர்ஜேடியில் இணையும் முக்கிய 'தலை'.. பரபரப்பு

Google Oneindia Tamil News

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங், லாலு பிரசாத்திடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் பலத்தை அதிகரிக்க லாலு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால் இவரது வருகை கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

பீகாரில் நெருங்கி வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைபிடிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் தீவிரமாக இருக்கிறார், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் அவர், சிறையில் இருந்தபடியே அரசியல் நடவடிக்கைக்கு பல்வேறு காய் நகர்த்தி வருகிறார்.

Bihar elections 2020: raghuvansh likely to stay

மிகவும் பின்தங்கிய அடித்தட்டு மக்கள் அதிகம் நிறைந்த பீகாரில் சாதி ரீதியான வாக்குகளே வெற்றியை தீர்மானிப்பதாக அரசியல் கட்சிகள் நம்புகின்றன. அதற்காக ஆளும் நிதீஷ்குமார் கட்சியாகட்டும், கூட்டணி கட்சியான பாஜகவாகட்டும் எல்லாமே அங்கு வேட்பாளர்களை முன்னிறுத்தும் விஷயத்தில் சாதியை பார்க்கின்றன. இதேபோல் எதிர்க்கட்சியான லாலுபிரசாத் யாதவ்வும் ஜாதி வாக்குகளை கவர பல்வேறு காய்நகர்த்தல்களை செய்து வருகிறார்

கடந்த ஜூன் மாதம் ஆர்ஜேடி தேசிய துணைத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கை எப்படியாவது கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று லாலு கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கிற்கும் தூது அனுப்பி இருக்கிறார். உங்கள் கவலைகள் தீர்க்கப்படும். நம்பிக்கையுடன் வாருங்கள் என்று உறுதி அளித்துள்ளார்.

முக கவசம் இருந்தால் மட்டுமே வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு அனுமதி - தமிழக அரசு அரசாணை முக கவசம் இருந்தால் மட்டுமே வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு அனுமதி - தமிழக அரசு அரசாணை

இதனால் உற்சாகம் அடைந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் மீண்டும் ஆர்ஜேடி கட்சியில் இணைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. எப்போது இணைய போகிறார் என்பது தெளியாக தெரியவில்லை.

பீகார் சட்டசபை தேர்தலை ராஜ்புத் வாக்குகளை கவருவதற்காகவே ரகுவன்ஷ் சிங் பிரசாத்தை களம் இறக்க ஆர்ஜேடி விரும்புகிறது. நிதீஷ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராமகிஷோர் சிங்கை ஆர்ஜேடியில் இணைத்ததை எதிர்த்துன் ரகுவன்ஷ் சிங் கட்சியில் இருந்து விலகினார். இப்போது மீண்டும் கட்சியில் இணைய உள்ளதால் பரபரப்பு பீகார் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் உயர் ஜாதி ராஜ்புத் தலைவர்களான ரகுவன்ஷ் மற்றும் ராமகிஷோர் இருவரும் வைசாலியில் தாக்கூர் தொகுதியைத் தான் குறிவைத்து களம் இறங்க விரும்புகிறார்கள். இதுவே பிரச்சனைக்கு காரணமாக உள்ளது. மீண்டும் கட்சியில் ரகுவன்ஷ் இணைந்தால் தங்கள் கட்சி பலப்படும் என ஆர்ஜேடி வெகுவாக நம்புகிறது.

English summary
Former Union minister Raghuvansh Prasad Singh, who resigned from the post of RJD national vice-president in June, may stay back in the party after he reportedly got a message from the party’s national president Lalu Prasad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X