பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தல் 2020: மாநிலம் முழுவதும் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் - ஆர்ஜேடி வாக்குறுதி

பீகார் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். பீகாரில் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் வாக்குறுதி அளித்துள்ளது.

Bihar Elections 2020: RJDs manifesto Tejashwi Yadav releases in Patna

பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 28ம்தேதி முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம், பாஜக கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ள நிலையில் ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் இன்று தனது கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய தேஜஸ்வி யாதவ், மாநில மக்களுக்கு நான் 10 லட்சம் வேலைகளை உறுதியளிக்கிறேன். வாக்குறுதியின் பொருட்டு ஒரு கோடி வேலைகளையும் நான் உறுதியளித்திருக்க முடியும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை, ஏனெனில் ஆட்சி அமைத்த பின்னர் அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஒரு யதார்த்தமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்..

நாங்கள் எங்கிருந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று எதிர்கட்சியினர் கேலி செய்கின்றனர். இப்போது, சம்பாதிப்பதற்கும் வேலைவாய்ப்புக்கும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே நாங்கள் அரசு வேலைகள் பற்றி பேசுகிறோம்,என்று கூறிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஜூனியர் பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு எங்களுக்கு அதிகமான காவலர்கள் தேவை. மணிப்பூர் ஒரு சிறிய மாநிலம், ஆனால் பீகாரை விட ஒரு லட்சம் மக்களுக்கு அதிகமான போலீசார் உள்ளனர் என்றும் தேஜஷ்வி கூறினார்.

English summary
Rashtriya Janata Dal (RJD) leader Tejashwi Yadav releases party's manifesto for BiharElections2020 in Patna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X