பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகாரில் வெல்லப்போவது யார்? வெளியானது ஏபிபி டிவி- சி வோட்டர் சர்வே

Google Oneindia Tamil News

பாட்னா: பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி பீகாரில் 135 முதல் 159 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்று, ஏபிபி-சிவோட்டர் சர்வே தெரிவிக்கிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன, தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் இறங்கியுள்ளன.

பீகாரில் வாக்குப்பதிவு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். நவம்பர் 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கிடையில், பீகார் தேர்தல் தொடர்பாக ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளிவந்துள்ளது. இது அக்டோபர் 1 முதல் அக்டோபர் 23 வரை மேற்கொள்ளப்பட்டது.

பீகார் சட்டசபை தேர்தல் 2020: மாநிலம் முழுவதும் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் - ஆர்ஜேடி வாக்குறுதிபீகார் சட்டசபை தேர்தல் 2020: மாநிலம் முழுவதும் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் - ஆர்ஜேடி வாக்குறுதி

சீமாஞ்சல் யாருக்கு

சீமாஞ்சல் யாருக்கு

பீகார் சட்டசபையில் 24 இடங்கள் உள்ளது சீமாஞ்சல் பகுதி. இந்த 24 இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி 28 சதவீதமும், மகாகட்பந்தன் 46 சதவீதமும் வாக்குகளை பெறுமாம். ஆனால் தொகுதி அடிப்படையில் 24 இடங்களில், என்.டி.ஏ 11 முதல் 15 இடங்களையும், மகாகத்பந்தன் 8 முதல் 11 இடங்களையும் பெற வாய்ப்புள்ளது. சிராக் பாஸ்வானின் எல்.ஜே.பி இங்கு எந்த தொகுதியையும் வெல்ல வாய்ப்பில்லையாம்.

போஜ்பூர்

போஜ்பூர்

மகத்-போஜ்பூர் பிராந்தியத்தில் 69 இடங்கள் உள்ளன. இதில், பாஜக கூட்டணி 44% (36-44 இடங்கள்), மகாகட்பந்தன்- 33% (23-30 இடங்கள்), எல்ஜேபி - 4% (ஒரு தொகுதியும் இல்லை) வாக்கு சதவீதம் மற்றும் தொகுதிகளை பெற முடியும். மற்றவை - 19% (2-3 தொகுதிகள்)

மிதிலாஞ்சல்

மிதிலாஞ்சல்

மிதிலாஞ்சல் பிராந்தியம் (50 இடங்கள்): என்.டி.ஏ - 41% (27-31 இடங்கள்), மகாகத்பந்தன் - 38% (18-21), எல்.ஜே.பி - 4% (1-3 இடங்கள்), மற்றவை - 17% (0-1 இடங்கள்). ஆங் பிரதேசம் (27 இடங்கள்): என்.டி.ஏ - 16-20 இடங்கள், மகாகத்பந்தன் - 6-10 இடங்கள், எல்.ஜே.பி - 0-2 இடங்கள், மற்றவை - 0-1 இடங்கள்.

மொத்த தொகுதிகள்

மொத்த தொகுதிகள்

ஆக மொத்தம், பீகார் தேர்தல்களில் நிதீஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ மொத்தமுள்ள 243 இடங்களில் 135 முதல் 159 இடங்களை வெல்லக் கூடும். ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய கூட்டணி 77 முதல் 98 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எல்.ஜே.பி 1 முதல் 5 இடங்களுடன் உள்ளது. மற்ற கட்சிகள் 4-8 இடங்களைப் பெறக்கூடும்.

English summary
Bihar Assembly Elections 2020: ABP News brings to you Opinion Polls conducted in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X