பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது

தேஜஸ்வி ஹெலிகாப்டரை ஒரு கும்பல் முற்றுகையிடப்பட்டது

Google Oneindia Tamil News

பாட்னா: ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்குமாறு அக்கட்சி தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது ஹெலிகாப்டரை சுற்றி பெரும் கூட்டம் கூடி விட்டதால் தேஜஸ்வி பாதுகாப்பு குறித்து அக்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர். அவருக்கு ஏதாவது பாதுகாப்பு குறைபாடு நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் கட்சியினருக்கு வந்துள்ளது.

Bihar elections: Crowd mobs Tejashwi’s helicopter, RJD raises security concerns

தேஜஸ்விக்கு போகும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடி வருகிறது. இது பாஜக மற்றும் நிதீஷ் குமார் கட்சியினருக்கு பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்து வருகிறது. பாஜகவை விட நிதீஷ் குமார்தான் இந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்.

இந்த நிலையில் இக்கூட்டமே தற்போது ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தேஜஸ்விக்கு பிரச்சினை வந்து விடுமோ என்ற அச்சம் கட்சிக்கு வந்துள்ளது. இதனால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு கட்சியின் ராஜ்யசபா எம்பி மனோஜ் குமார் ஜா, தேர்தல் ஆணையத்துக்கும், தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் சொல்லும்போது, "பலமுறை கோரிக்கை விடுத்தும்கூட தேஜஸ்வி யாதவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருக்கிறது.. இதனால் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.. அவரது ஹெலிகாப்டரை பலர் முற்றுகையிடும் அளவுக்கு பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளன.. சமூக விரோதிகள் கட்சி தொண்டர்கள் என்ற பெயரில் புகுந்து கலகம் விளைவிக்கும் அபாயமும் உள்ளது. அதனால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்" என்று ஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பி இருக்கிறார்.. சமீபத்தில் ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பலால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தடுப்புகளை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே புகுந்து ஹெலிபேடுக்குள் புகுந்து விட்டனர். ஹெலிபேட் சேதமடைந்தால் ஹெலிகாப்டர் இறங்கும்போது விபத்து நேரிட வாய்ப்புள்ளது என்பதால் ஆர்ஜேடி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயிச்சது யாரு ஜெயிச்சது யாரு "டிரம்ப்பா" இல்லாட்டி "பிடனா".. உடனே தெரியாது.. காத்திருக்கணும்!

தேஜஸ்விக்கு உரிய பாதுகாப்பை தராமல் பீகார் போலீசார் மோசமாக நடந்து கொள்வதாகவும் ஆர்ஜேடி கட்சி புகார் கூறியுள்ளது. பீகாரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது... முதல் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது!

English summary
Bihar elections: Crowd mobs Tejashwi’s helicopter, RJD raises security concerns
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X