பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம திருப்பம்.. பீகாரில் ஆட்சியை இழக்கும் நிதிஷ் குமார்? வரிசையாக அதிர வைத்த எக்சிட் போல் முடிவுகள்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று இன்று இறுதிகட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மாலை 6 மணி முதல் பல்வேறு டிவி சேனல்களின் எக்ஸிட் போல்கள் வெளியாகி வருகின்றன.

Recommended Video

    Bihar Exit polls ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது ? | Oneindia Tamil

    இதில் செம திருப்பமாக, நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியை இழக்கும் அல்லது கடும் போட்டி இருக்கும் என்றுதான் பல டிவி சேனல்களும் தெரிவித்தன.

    பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. கொரோனா காலத்தில் நமது நாட்டில் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலும் பீகாரில்தான். மூன்றாவது கட்ட தேர்தல் இன்று முடிந்தது. நவம்பர் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பீகாரில் இரண்டு முக்கிய கூட்டணிகளிடையே கடும் போட்டி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் கிராண்ட் அலையன்ஸ் (ஜிஏ) ஆகியவைதான் அவை.

    பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதிஷ்.. தனிப்பெரும் கட்சியாகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்- ஏபிபி எக்சிட் போல்பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதிஷ்.. தனிப்பெரும் கட்சியாகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்- ஏபிபி எக்சிட் போல்

    கட்சிகள்

    கட்சிகள்

    என்.டி.ஏ, கூட்டணியில் ஜனதா தளம் (யுனைடெட்), பாரதிய ஜனதா, முன்னாள் முதல்வர் ஜிதான் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற- எச்ஏஎம்-எஸ்) மற்றும் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஆகியவற்றை உள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிச-லெனினிசம்) ஆகியவை மற்றொரு கூட்டணியில் உள்ளன.

    போட்டிகள்

    போட்டிகள்

    ஆர்ஜேடி 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், சிபிஐ (எம்எல்) 19 இடங்களிலும் போட்டியிட்டது. என்.டி.ஏ-வில் இருந்து, ஐக்கிய ஜனதாதளம் 115 இடங்களிலும், பாஜக 110 இடங்களிலும் போட்டியிட்டது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வரிசையாக பல நிறுவனங்கள்-டிவி சேனல்கள் இணைந்து எடுத்த எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

    ஏபிபி சேனல்

    ஏபிபி சேனல்

    ஏபிபி சேனல்- சி வோட்டர் கருத்துக்கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 104 முதல் 128 தொகுதிகள் வரை வெல்ல கூடும். எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி 108 தொகுதிகள் முதல் 131 தொகுதிகள் வரை வெல்லக் கூடும். அதாவது நிதிஷ் குமார் கூட்டணியை விட எதிர்க்கட்சி கூட்டணி அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

    டைம்ஸ் நவ்

    டைம்ஸ் நவ்

    பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கு 120 இடங்களும் ஜேடியூ - பாஜக அணிக்கு 116 இடங்களும் கிடைக்கும் என சி வோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. பிற கட்சிகள் மொத்தம் 6 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்கிற சிவோட்டர்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்.

    ரிபப்ளிக் டிவி

    ரிபப்ளிக் டிவி

    பீகாரில் 118 முதல் 138 இடம் வரை காங். கூட்டணி கைப்பற்றும் என்று ரிபப்ளிக் டிவி தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணிக்கு 117 இடங்கள் வரை கிடைக்கலாம். லோக் ஜன சக்தி கட்சிக்கு 5 முதல் 8 இடம் வரை கிடைக்கலாம். கடந்த தேர்தலில் தனித்தே பாஜக 24 சதவீதம் வாக்குகளை பெற்றது. ஆனால் இப்போது ஜேடியூ கூட்டணி இருந்தும் தோற்கப்போகிறது என்பதே அனைத்து எக்சிட் போல் முடிவுகளும் சொல்லும் பாடம்.

    English summary
    There will be numerous exit polls predicting the fate of candidates who took part in the fray in Bihar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X